வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

தெரியாத்தனமாக தனுஷுக்கு ரஜினி செய்த நல்லது.. ஜெயிலரால், கேப்டன் மில்லருக்கு எகிறும் கெடுபிடி

Rajinikanth – Dhanush: ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன்களை நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது. ரஜினிக்கு இது ஒரு மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட் படமாக அமைந்துவிட்டது. அதே நேரத்தில் இந்த படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன், ஜெயிலர் படம் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்திருக்கிறது. ரஜினி ரசிகர்களும் இந்த படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே மல்டி ஸ்டார்ஸ் கூட்டணியில் ஜெயிலர் படம் உருவாகிக் கொண்டிருப்பதாக வெளியான தகவல்களால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகமாக இருந்தது. இருந்தாலும் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் மற்றும் சுனில் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு இந்த படத்தில் சரியான கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டிருக்குமா என்ற சந்தேகம் சினிமா ரசிகர்களுக்கு இருந்தது.

Also Read:ஒரே நேரத்தில் ரெட்டை சவாரி செய்த ஜெயிலர் வர்மன்.. யாரும் அறிந்திடாத விநாயகனின் ஆரம்பம்

படம் ரிலீஸ் ஆன பிறகு இந்த படத்தின் ஒவ்வொரு கேரக்டர்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. படத்தின் வில்லனாக வந்த விநாயகம் அதிக அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறார். அதேபோன்று ஒரு சில காட்சிகளே என்றாலும், படம் பார்த்தவர்களின் மனதில் நிலைத்து நின்ற கேரக்டர் என்றால் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் தான். தற்போது இவரின் படங்களை தமிழ் ரசிகர்கள் தேடிப் பார்க்கும் அளவிற்கு வரவேற்பை பெற்றுவிட்டார்.

இதுவரைக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, சிவராஜ்குமாரை மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் சகோதரராகத்தான் தெரியும். அதை தாண்டி இவருக்கு ஜெயிலர் படம் ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்திருக்கிறது. அதுமட்டுமில்லாது இந்த படத்தால் நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்திற்கு இலவசமாக பிரமோஷனும் கிடைத்திருக்கிறது. இந்த படத்தின் ரிலீஸுக்காக தற்போது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Also Read:D50 க்கு தரமாக ஸ்கெட்ச் போட்ட தனுஷ்.. களம் இறங்கி இருக்கும் மல்டி ஸ்டார்ஸ் கூட்டணி

ரஜினியின் ஜெயிலர் படத்தால் சிவராஜ்குமாரை பிடித்துப் போன தமிழ் சினிமா ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் இவர் நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். இவர் அந்த படத்தில் தனுஷுக்கு அண்ணனாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இப்போது தனுஷை தாண்டி சிவராஜ்குமாருக்காக கேப்டன் மில்லர் படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதனாலேயே படத்தின் வெற்றி ரிலீஸ்க்கு முன்பே பாதிக்குப் பாதி உறுதியாகிவிட்டது. ஒரு பக்கம் தனுசுக்காக ரசிகர்கள் படம் பார்க்க குவிந்தாலும், இப்போது ஜெயிலர் படத்தால் சிவராஜ்குமாரை பார்ப்பதற்காக மீதி கூட்டமும் கேப்டன் மில்லருக்கு சேர்ந்து விடும் என்பதில் சந்தேகமே இல்லை. தெரிந்தோ, தெரியாமலோ தனுஷுக்கு அவருடைய முன்னாள் மாமனாரால் பெரிய ஜாக்பாட் அடித்து விட்டது.

Also Read:தனுஷ் குடும்பத்தில் இருந்து அடுத்த ஹீரோ ரெடி.. நாலா பக்கமும் கொடுத்த நெருக்கடியால் எடுத்த முடிவு

Trending News