Jailer Movie Review : இன்று சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கிறது. உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியாகி இருக்கும் ஜெயிலர் தற்போது பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. திரும்பும் பக்கம் எல்லாம் இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் தான் குவிந்து கொண்டிருக்கிறது.
படம் பற்றி சிலர் வேண்டுமென்றே நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பி வந்தாலும் அதையெல்லாம் அடித்து நொறுக்கி இருக்கிறது சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மோகன் லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்தின் விரிவான விமர்சனத்தை இங்கு காண்போம்.
ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக இருக்கும் ரஜினி மனைவி, மகன், மருமகள், பேரன் என வசித்து வருகிறார். அதில் ரஜினியின் மகன் வசந்த் ரவி நேர்மையான போலீசாக இருக்கிறார். ஒரு சிலை கடத்தல் பிரச்சனையில் காணாமல் போகும் அவர் கொல்லப்பட்டதாக தெரிய வருகிறது. தன் மகனின் இறப்புக்கு பழிவாங்க வரும் ரஜினி வில்லன் கூட்டத்தை ஒழித்துக் கட்டுவது தான் படத்தின் கதை.
கதை பல படங்களில் பார்த்ததாக இருந்தாலும் அதை நெல்சன் தன்னுடைய ஸ்டைலில் கொடுத்திருப்பது தான் சிறப்பு. டார்க் காமெடி, ஆக்சன் என கலவையாக வந்திருக்கும் இப்படம் முழுக்க முழுக்க தலைவரின் அலப்பறையாக தான் இருக்கிறது. அதிலும் இடைவேளை காட்சி தியேட்டரையே அலற விட்டுள்ளது.
Also Read: ஜெயிலர் விமர்சனத்திற்கு தயாரான ப்ளூ சட்டை.. ஒத்த வரியில் கொடுத்த கமெண்ட், நெல்சா மண்ட பத்திரம்
சாதுவாக இருக்கும் ரஜினி புலியாக மாறுவதிலிருந்து அவருடைய ஸ்டைல் ஒவ்வொன்றும் ரசிக்க வைத்துள்ளது. அதற்கு ஏற்றது போல் அவருக்கு போட்டிருக்கும் மேக்கப்பும் பொருத்தமாக இருக்கிறது. மேலும் யோகி பாபுவுக்கும், ரஜினிக்கும் இடையே இருக்கும் காட்சிகள் கூடுதல் ரசனையை ஏற்படுத்தி இருக்கிறது.
இப்படி படம் முழுக்க ரஜினியின் ஆதிக்கம் இருந்தாலும் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு போன்ற கேரக்டர்கள் சந்தடி கேப்பில் ஸ்கோர் செய்து விடுகின்றனர். அதிலும் சிவராஜ்குமார், மோகன்லால் வரும் காட்சிகள், அதற்கு கொடுக்கப்பட்ட பின்னணி இசை அனைத்தும் வேற லெவலில் இருக்கிறது. இப்படி சூப்பர் ஸ்டாருக்கு அடுத்தபடியாக அனிருத் தான் படத்தை ஆக்கிரமித்து இருக்கிறார்.
Also Read: அலப்பறையை ஆரம்பித்த தலைவர், நெல்சன் தல தப்புமா.? அனல் பறக்கும் ஜெயிலர் ட்விட்டர் விமர்சனம்
அந்த அளவுக்கு அவருடைய இசை அனல் பறக்கிறது. அதில் காவாலா, தலைவர் அலப்பறை ஒரு ரகமாகவும் ரத்தமாரே பாடல் ஒரு ரகமாகவும் ரசிக்க வைக்கிறது. இப்படி தலைவருக்கு மட்டுமல்லாமல் தனக்கும் ஒரு அசத்தல் கம்பேக் கொடுத்திருக்கிறார் நெல்சன். இரண்டாம் பாதி கொஞ்சம் சலிப்பு தட்டினாலும் மொத்தத்தில் பதுங்கி இருந்து பாய்ந்த முத்துவேல் பாண்டியன் கொண்டாடப்பட வேண்டியவர் தான். ஆக மொத்தம் இந்த ஜெயிலர் – ஜெயித்துவிட்டார்.
சினிமா பேட்டை ரேட்டிங்: 3.25/5