திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரஜினியை பாடாய்ப் படுத்தும் நெல்சன்.. பரபரப்பை கிளப்பிய ஜெயிலர் ஷூட்டிங்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டது. பீஸ்ட் திரைப்படத்தின் தோல்வியால் நொந்து போயிருந்த நெல்சன் இந்த திரைப்படத்திற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறாராம்.

எப்படியாவது இந்த படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி அடைய வைக்க வேண்டும் என்பதற்காக அவர் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகிறாராம். அந்த வகையில் தற்போது அவர் சூப்பர் ஸ்டார் சம்பந்தப்பட்ட காட்சிகளை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

Also read : அந்த ஹீரோயின் நடித்தாலே ஹிட் தான்.. தமிழ் தெரியாத நடிகையுடன் போராடிய ரஜினி, கமல், பாரதிராஜா

அந்த காட்சிகள் அனைத்தும் தற்போது எண்ணூரில் படமாக்கப்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் தான் அந்த காட்சிகள் சூட் செய்யப்பட்டு வருகிறதாம். அதில் சூப்பர் ஸ்டார் குடிக்கு அடிமையானவர் போன்று நடித்து வருகிறாராம். மஞ்சள் சட்டை மற்றும் காக்கி பேண்ட் அணிந்தபடி அவர் டாஸ்மாக் கடையிலிருந்து வருவது போன்று அந்த காட்சி படமாக்கப்பட்டு வருகிறதாம்.

காட்சி மிகவும் தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக நெல்சன் பல டேக்குகள் போனாலும் பரவாயில்லை என்று கவனமுடன் இயக்கிக் கொண்டிருக்கிறாராம். சமீப காலமாக சூப்பர் ஸ்டார் புகைப்பிடித்தல், மதுபானம் அருந்துவது போன்ற காட்சிகளை தன்னுடைய படங்களில் வைப்பதை தவிர்த்து வருகிறார்.

Also read : ரஜினியை வந்து என் படத்தில் நடிக்க சொல்லுங்கள்.. ஆவேசமாய் வந்த வாய்ப்பை மறுத்த குணச்சித்திர நடிகர்

இத தன்னை விரும்பும் கோடான கோடி ரசிகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடாது என்பதற்காக கடந்த சில வருடங்களாகவே இதை அவர் பின்பற்றி வருகிறார். கதைக்கு தேவை என்றால் மட்டுமே அதில் நடிப்பதற்கு அவர் சம்மதிக்கிறார்.

அந்த வகையில் ஜெயிலர் திரைப்படத்தில் அவர் குடிபோதையில் இருப்பது போன்று பல காட்சிகள் இருக்கிறதாம். இது படத்திற்கு மிகவும் முக்கியம் என்பதால்தான் ரஜினியும் மறுப்பேதும் கூறாமல் நடித்து வருகிறாராம். இதனால் இப்படத்திற்கு தற்போது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Also read : பத்திரிக்கையாளரை ஓட ஓட விரட்டிய ரஜினி.. நல்ல சம்பவம் நடக்கும் போது இப்படியா பண்றது தலைவரே

Trending News