இலவச டிக்கெட், விடுமுறை அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 10.. புது ட்ரெண்டை உருவாக்கி பவரை காட்டிய ஜெயிலர்

Actor Rajini: சூப்பர் ஸ்டார் என்ற பெயருக்கு தான் எவ்வளவு பவர் இருக்கிறது. அவரால் மட்டும் தான் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்த முடியும் என்று பலரும் சிலாகித்து பேசும் அளவிற்கு தான் ஒவ்வொரு விஷயமும் நடந்து கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு ரஜினி என்னும் மனிதர் ரசிகர்களை தன் வசப்படுத்தி இருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் நாளை பிரம்மாண்டமாக வெளிவர இருக்கிறது. இதற்கான பிரமோஷனை தயாரிப்பு தரப்பு இப்போது அதிரடியாக செய்து கொண்டிருக்கிறது. ஆனால் இதெல்லாம் எங்களுக்கு தேவையே இல்லை. எப்படி இருந்தாலும் சூப்பர் ஸ்டார் படம் எங்களுக்கு முக்கியம் தான் என்று ரசிகர்கள் கெத்து காட்டி வருகின்றனர்.

Also read: ரிலீசுக்கு முன்னாடி கலெக்ஷன் பார்த்துடனும்.. உசுர கொடுத்து மேடையில் ரஜினி பேசியதன் காரணம்

அந்த வகையில் தற்போது ஆகஸ்ட் 10 ஜெயிலர் ரிலீஸ் நாளை முன்னிட்டு சென்னை, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் ஊழியர்களுக்கு பல நிறுவனங்கள் விடுமுறையை அறிவித்துள்ளன. அதிலும் சில நிறுவனங்கள் இலவசமாக டிக்கெட்டுகளையும் கொடுத்து விடுமுறை அளித்தது தான் பெரும் ஆச்சரியமாக இருக்கிறது.

பொதுவாக சூப்பர் ஸ்டார் படம் ரிலீஸ் ஆகிறது என்றால் இது போன்ற அலப்பறையும், ஆரவாரமும் அதிகமாக தான் இருக்கும். ஆனால் இந்த முறை அது கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. ஏற்கனவே எந்திரன் போன்ற படங்கள் வெளிவந்த போது இதே போன்று தான் விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டது.

Also read: ஜெயிலர் பார்த்தாச்சு, 4 வருடம் கழித்து இமயமலை கிளம்பிய ரஜினி.. சூப்பர் ஸ்டார் கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்

அதிலும் சில ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் படத்தை பார்க்க வேண்டும் என்று விடுப்பு கடிதம் எழுதிக் கொடுத்த கதையும் நடந்திருக்கிறது. அந்த அளவுக்கு ரஜினி சர்வதேச அளவில் தன் பவரை காட்டிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது ஜெயிலர் அலப்பறையும் அமோகமாக தொடங்கி இருக்கிறது.

இதுதான் இப்போது சோசியல் மீடியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. வேறு எந்த நடிகருக்கும் கிடைக்காத ஒரு மரியாதை சூப்பர் ஸ்டார் படங்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதனாலேயே தற்போது டாப் ஹீரோக்கள் பலரும் இதை கொஞ்சம் பொறாமையோடு பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also read: இந்த ஆண்டு யாருமே பண்ணாத வசூலை வாரி குவிக்கும் ரஜினி.. அஜித், விஜய், ps2 படங்களை பின்னுக்கு தள்ளிய ஜெயிலர்