திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இந்த ஆண்டு யாருமே பண்ணாத வசூலை வாரி குவிக்கும் ரஜினி.. அஜித், விஜய், ps2 படங்களை பின்னுக்கு தள்ளிய ஜெயிலர்

Rajini In Jailer: ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஜெயிலர் நாளை திரையரங்குகளை அலங்கரிக்க வருகிறது. எப்பொழுது இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் போன்ற விஷயங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்ததோ அப்போதையிலிருந்து இப்படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்று ஆர்வம் கூடிவிட்டது.

அதன் விளைவாக ரஜினி இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய கம்பீரமான பேச்சுக்கு இப்படம் கண்டிப்பாக ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அத்துடன் இந்த ஆண்டு வெளிவந்த வாரிசு, துணிவு மற்றும் பொன்னியின் செல்வன் 2 போன்ற படங்களில் உள்ள வசூல் சாதனை முறியடிக்கும் வகையில் ஜெயிலர் மிகப்பெரிய சாதனையை ஏற்படுத்த போகிறது.

Also read: நெல்சனால் இமயமலைக்கு சென்ற ரஜினி.. ஜெயிலரை பார்த்த பின் ஏற்பட்ட குழப்பம்

மேலும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இந்த படத்தைக் கொண்டாடுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் நாளை அனைத்து பக்கங்களிலும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யப் போகிறது. முக்கியமாக முதல் நாள் பார்க்க வேண்டும் என்றால் அதுக்கேத்த மாதிரி டிக்கெட் ரேட் அதிகரித்து தான் இருக்கும்.

ஆனால் அதெல்லாம் பொருட்படுத்தாமல் எங்களுடைய தலைவர் படத்தை முதல் நாளே பார்த்தாக வேண்டும் என்று தீவிரமாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இப்படத்தை பார்ப்பதற்கு முன் பதிவு செய்யப்பட்டு அனைத்து தியேட்டர்களும் ஹவுஸ் ஃபுல்லாக ஆகிவிட்டது.

Also read: முதல் முதலில் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட ரஜினி, கமல் படம்.. சூப்பர் ஸ்டாரை தூக்கி விட்டு, ஆண்டவரை காலை வாரியது

இதனை தொடர்ந்து முதல் வாரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் அடுத்த வாரத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் நடைபெற்று வருகிறது. இப்படி படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடியே அதிக லாபத்தை பெற்று, முதல் இடத்தை பிடித்து விட்டது.

இந்த ஆண்டு யாருமே பண்ணாத வசூலை வாரிக் குவிக்க போகிறார் ரஜினி. இப்படத்தின் வசூல் சாதனை இதுவரை ரஜினி படங்களில் பார்க்காத அளவிற்கு கொட்ட போகிறது. தற்போது இன்னொரு விஷயமும் வெளியாகி உள்ளது. அதாவது ஜெயிலர் படத்தில் காமெடி காட்சிகளுக்கும் பஞ்சமே இல்லாத அளவிற்கு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆக மொத்தத்தில் இந்த வருடம் ரஜினி வசூல் மன்னனாக ஜொலிக்கப் போகிறார்.

Also read: அந்த படம் வேண்டாம், மீண்டும் எடுத்தால் ஓடாது.. சூப்பர் ஹிட் படத்தை ரஜினி மறுத்ததன் காரணம்

Trending News