சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

சந்தியா ராகம் சீரியலில் வைராக்கியமாக இருந்து ரகுராம் மனசை மாற்றிய ஜானகி.. தனத்தை டார்ச்சர் பண்ணும் கார்த்திக்

Sandhiya Ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம் சீரியலில், தனத்தின் வாழ்க்கை கதிருடன் அமைந்துவிட்டது என்பதை விட ஜானகி நம் பேச்சைக் கேட்காமல் எதிர்த்து பேசியதால் மொத்தமாக ரகுராம் உடைந்து போய்விட்டார். இதனால் ரகுராமுக்கும் அந்த வீட்டுக்கும் சம்பந்தமே இல்லாத போல் வீட்டில் இருப்பவர்களிடம் ஒதுங்கி வாழ்ந்து வருகிறார்.

அத்துடன் ஜானகி மீது இருக்கும் கோபத்தினால் ஜானகிடம் பேசாமல் ஜானகி சமைத்த சாப்பாட்டை சாப்பிடாமலும் இருந்த ரகுராம் தற்போது உடல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறார். உடனே ரகுராமின் அம்மா, ஜானகி சமைத்துக் கொடுத்த சாப்பாடு தான் உன் உடம்புக்கு செட் ஆகும். தயவு செய்து உன்னுடைய பிடிவாதத்தை விட்டு விடு என்று சொல்கிறார்.

உடனே ஜானகி, ரகுராமிற்காக சமைத்து சாப்பாட்டை வந்து கொடுக்கிறார். ஆனால் ரகுராம் பிடிவாதமாக நீ சமைத்து சாப்பாட்டை என்னால் சாப்பிட முடியாது. என் கண் முன்னே நின்னு இன்னும் அதிகமாக வெறுப்பேற்றாதே தயவு செய்து வெளியே போ என்று திட்டி விடுகிறார். ஆனால் இதை இப்படியே விட்டு விடக்கூடாது என்பதற்காக ஜானகி நீங்கள் நான் சமைத்த சாப்பாட்டை சாப்பிடும் வரை நான் இந்த வீட்டில் பச்சை தண்ணி கூட குடிக்க மாட்டேன் என்று கோபமாக சொல்லி போய் விடுகிறார்.

பிறகு எல்லோரும் வந்து ஜானகியை சமாதானப்படுத்தி சாப்பிட கூப்பிடுகிறார்கள். ஆனால் ஜானகி ரகுராம் சாப்பிடாமல் நான் சாப்பிட மாட்டேன் என்று சொல்லிவிட்டார். ஆனாலும் ஜானகி சாப்பிடாம இருந்ததால் மயக்கம் போட்டு கீழே விழுந்து விடுகிறார். பிறகு தனம், அம்மாவின் நிலைமையை பார்த்து பீல் பண்ணி ரகுராமிடம் பேசுகிறார்.

அப்பா, அம்மா பாவம் சாப்பிடாமல் கீழே விழுந்துட்டாங்க. தயவு செய்து நீங்கள் உங்கள் பிடிவாதத்தில் இருந்து கொஞ்சம் வெளியேறி அம்மாவை யோசித்துப் பாருங்கள் என்று கெஞ்சி கூப்பிடுகிறார். அதன்பிறகு ரகுராம், ஜானகி சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டு விட்டார்.

எது எப்படியோ ஜானகி பிடிவாதமாக இருந்ததால் வைராக்கியமாக இருந்த ரகுராம் மனசு கொஞ்சம் மாறிவிட்டது. இதற்கிடையில் தனத்தை வைத்து ரகுராம் குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்று நினைக்கும் புவனேஸ்வரி திட்டத்தை பூர்த்தி செய்யும் விதமாக கார்த்திக் யாருக்கும் தெரியாமல் தனத்தை பார்ப்பதற்கு ரகுராம் வீட்டிற்கு வந்து விடுகிறார்.

வந்ததும் தனத்திடம் ப்ளாக் மெயில் பண்ணி நாளை நான் சொல்லும் இடத்திற்கு நீ என்னை வந்து பார்க்கவில்லை என்றால் நான் என் உயிரே விட்டு விடுவேன் என்று டார்ச்சர் பண்ணி போய்விடுகிறார். இதை தெரிந்து கொண்ட கதிர், கார்த்திக்கை நடுரோட்டில் வைத்து அடித்து புவனேஸ்வரி வீடு வரும் வரை கார்த்திகை அடித்து தனத்தின் வாழ்க்கையில் குறுக்கிட கூடாது என்று சொல்லி விடுகிறார்.

இந்த மொத்த கோப்பத்தையும் காட்டும் விதமாக தனத்தை கார்த்திக்கு என்ன பண்ணப் போகிறார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனாலும் மாயா கதிர் இருக்கும் வரை ரகுராம் குடும்பத்திற்கும் தனத்திற்கும் எதுவும் ஆகாது.

Trending News