வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சந்தியா ராகம் சீரியலில் மாயாவிற்காக ஜானகி எடுத்த முடிவு.. கோபத்தில் ரகுராம், அதிர்ச்சியாய் நிற்கும் குடும்பம்

Sandhiyaragam Serial: ஜீ தமிழ் சீரியலில் ஒளிபரப்பாகி வரும் சந்தியா ராகம் சீரியலில், மாயாவை புரிந்து கொள்ளாமல் ராகுராம் உச்சகட்ட கோபத்தில் இருக்கிறார். ஆனாலும் பஞ்சாயத்தில் சொன்னபடி சீனு, மாயவை கூட்டிட்டு வீட்டிற்கு வருகிறார். மாயாவுடன் சேர்ந்து கதிரும் தனத்துடன் வாழ்வதற்கு வருகிறார். ஆனால் அனைவரையும் வாசலிலேயே ரகுராம் நிப்பாட்டி வைத்து பத்மா, சீனு மற்றும் மாயா யாரும் இந்த வீட்டில் இருக்கக் கூடாது.

எல்லோரும் வெளியே போய் விடுங்கள் என்று கோபமாக சொல்கிறார். இதனைக் கேட்ட பத்மா, நேற்று வந்த மாயாவிற்காக என்னை வெளியே போக சொல்வது என்ன நியாயம் என்று கேட்கிறார். அதற்கு ரகுராம் உன்னுடைய பையன் தானே மாயா வேணும் மாயா உடன் தான் வாழ்வேன் என்று எல்லாரும் முன்னாடியும் சொன்னான்.

என்னுடைய முதுகில் குத்தி நம்பிக்கை துரோகம் பண்ணிய மாயா முகத்தில் நான் முழிக்க தயாராக இல்லை. அதனால் நீங்கள் அனைவரும் சேர்ந்து வீட்டை விட்டு வெளியே போங்க என்று கடுமையாக பேசுகிறார். அப்பொழுது ஜானகி, ரகுராமிடம் பேச முயற்சி எடுக்கிறார். ஆனால் ரகுராம் எதையும் காது கொடுத்து கேட்க தயாராக இல்லை.

அப்பொழுது ரகுராம், என்னுடன் இத்தனை வருஷமாக வாழ்ந்த வாழ்க்கைக்கும், குடும்பத்திற்காகவும் நீ எவ்வளவோ விஷயங்களை தியாகம் பண்ணி இருக்கிறாய். அதே மாதிரி இப்பொழுதும் நீ எனக்கு சப்போர்ட் பண்ணி எதுவும் பேசாமல் இரு என்று அடக்கப் பார்க்கிறார். ஆனால் மாயா எதற்காக பண்ணினார் என்ற விஷயம் தெரிந்த ஜானகி சும்மா விடுவதாக இல்லை.

அதனால் ரகுராமை எதிர்த்து பேசும் அளவிற்கு ஜானகி, மாயா இந்த வீட்டில் தான் இருப்பாள் என்று தெளிவாக கூறிவிட்டார். இதை எதிர்பார்க்காத ரகுராம் அதிர்ச்சியாக நிற்கிறார். குடும்பத்தில் இருப்பவர்களும் ஜானகி இப்படி பேசக்கூடிய ஆளு கிடையாதே என்ன என்று தெரியாமல் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார்கள்.

இதனை அடுத்து ஜானகியின் பேச்சை தட்ட முடியாமல் ரகுராமும் வாயை மூடிக்கொண்டு தான் இருப்பார். அப்படி அந்த வீட்டிற்குள் நுழைந்த மாயா மற்றும் கதிர் கொஞ்சம் கொஞ்சமாக அங்கு இருப்பவர்கள் மனதையும் மாற்றி தனம் மற்றும் சீனுடன் சந்தோஷமாக வாழ்வார்கள்.

ஆனால் இதற்கு இடையில் புவனேஸ்வரி பல சதிகளை போட்டு அந்த குடும்பத்திற்கு ஏகப்பட்ட சிக்கல்களையும் பிரச்சனைகளையும் கொடுக்க முயற்சி எடுப்பார். ஆனால் மாயா இருக்கும் வரை யாராலும் ரகுராம் குடும்பத்தை ஒன்னும் பண்ண முடியாது என்பதற்கு ஏற்ப தற்போது ஜானகியும் ஒன்று சேர்ந்து விட்டார்.

Trending News