Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ஃபேர்வெல் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்த ஜனநாயகன் படக்குழு..எமோஷனலான தளபதி

ஃபேர்வெல் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்த ஜனநாயகன் படக்குழு..எமோஷனலான தளபதி

Vijay : விஜய் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் கதாநாயகனாக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். அவரது அப்பா சினிமாவில் இயக்குனராக இருந்தாலும் தன்னுடைய கடின உழைப்பால் விஜய் மாபெரும் உயரத்தை அடைந்தார். கோலிவுட் சினிமாவில் அதிக சம்பளம் […]

Vijay : விஜய் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் கதாநாயகனாக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். அவரது அப்பா சினிமாவில் இயக்குனராக இருந்தாலும் தன்னுடைய கடின உழைப்பால் விஜய் மாபெரும் உயரத்தை அடைந்தார்.

கோலிவுட் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதல் இடத்தை பிடித்தார். இவ்வாறு உச்சாணி கொம்பில் இருக்கும்போதே சினிமாவை முற்றிலுமாக விட்டுவிட்டு அரசியலில் இறங்க முடிவெடுத்துள்ளார்.

அவ்வாறு விஜய்யின் 69ஆவது படமான ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது. ஹெச் வினோத் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை, கொடைக்கானல் போன்ற இடங்களில் நடைபெற்றது.

ஜனநாயகன் படப்பிடிப்பில் எமோஷனலான விஜய்

இன்னும் சில நாட்களில் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு முடிய உள்ளது. இதன்பிறகு படங்களில் விஜய் நடிக்க மாட்டேன் என்று சொல்லி உள்ளதால் ஜனநாயகன் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் பெரிய பார்ட்டி வைக்க ஏற்பாடு செய்ய இருந்தனர்.

விஜய்யின் ஃபேர்வெல் பார்ட்டி மிகவும் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்றும் வினோத் கூறியிருக்கிறார். இந்த விஷயம் விஜய்யின் காதிற்கு சென்றவுடன் அவர் இதெல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

ஏனென்றால் அவரே கனத்த இதயத்துடன் தான் சினிமாவை விட்டு போகிறார். இதனால் ஃபேர்வெல் பார்ட்டி எல்லாம் வேண்டாம் இன்னும் நான்கு நாள் கால்ஷீட் வேண்டுமானாலும் கொடுங்கள் என்று எமோஷனலாக பேசியிருக்கிறாராம்.

இது அங்கு உள்ள அனைவரையுமே கண்கலங்க செய்துவிட்டதாம். மேலும் ஜனநாயகன் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை திரைக்கு வர இருக்கிறது. விஜய்யின் கடைசி படம் என்பதால் ஒட்டுமொத்த சினிமாவும் இந்த படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.