புதன்கிழமை, ஜனவரி 22, 2025

முதல் முறையாக குணசேகரனுக்கு எதிராக ஜெயிக்கப் போகும் ஜனனி டீம்.. தம்பிகள் செய்த உருப்படியான விஷயம்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், தான் என்ற ஆணவத்துடன் அராஜகம் பண்ணி வந்த குணசேகரன் முதல் முறையாக தோற்கப் போகிறார்.

அதாவது சித்தார்த்தை கண்டுபிடிச்சாச்சு, இனிமேல் தர்ஷினிக்கும் சித்தார்த்துக்கும் கல்யாணம் பண்ணி வைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று குணசேகரன் மற்றும் உமையாள் ஓவர் குஷியில் இருக்கிறார்கள்.

ஆனால் கதிர், இதில் உள்ளே நுழைந்து மொத்த ஆட்டத்தையும் கெடுத்து விட்டார். அதாவது ராமசாமி இருக்கும் இடத்திற்கு போய் ஆள் அசந்த நேரமாக பார்த்து காரியத்தை சக்தி மூலம் கச்சிதமாக செய்து விட்டார். ராமசாமி காருக்குள் சித்தார்த் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது காருடன் சேர்த்து சக்தி, சித்தார்த்தை கூட்டிட்டு வந்து விட்டார்.

பிறகு ஜனனி, அஞ்சனாவையும் அம்மாவையும் கண்டுபிடித்து விட்டார். அத்துடன் அஞ்சனாக்கும் சித்தார்த்துக்கும் கல்யாணத்தை பண்ணி வைக்கும் முயற்சியில் ஜனனி ஒரு மாஸ்டர் பிளான் போட்டு குணசேகரன் கண்ணில் மண்ணை தூவி அங்கிருந்து எஸ்கேப் ஆகி விட்டார்கள்.

குணசேகரனை திசைதிருப்ப போகும் தர்ஷினி

அந்த வகையில் கதிர் மற்றும் சக்தி, சித்தார்த்தை கூட்டிட்டு கோவிலுக்கு வந்து விடுவார்கள். பின்பு ஜனனி, அஞ்சனாவை கூட்டிட்டு ஞானம், ரேணுகா மற்றும் நந்தினி அனைவரும் அதே கோவிலுக்கு போய் விடுகிறார்கள். இன்னொரு பக்கம் ஜனனி அப்பத்தா, சித்தார்த்தின் அப்பா இவர்களும் மகனின் கல்யாணத்தை பார்க்க போய் விடுகிறார்கள்.

ஆக மொத்தத்தில் இந்த ஒரு விஷயத்தில் தான் முதல்முறையாக ஜனனி டீம் வெற்றியை பார்க்கப் போகிறார்கள். இவர்களுடைய கல்யாணம் மட்டும் நடந்துவிட்டால் தர்ஷினி கிரேட் எஸ்கேப் ஆகி விடுவார். இன்னும் சொல்லப்போனால் குணசேகரனை டைவர்ட் பண்ணுவதே தர்ஷினியாக தான் இருக்கப் போகிறார்.

இதனை தொடர்ந்து இனி குணசேகரனுக்கு ஒவ்வொரு விஷயத்திலும் தோல்வியதான் பார்க்கப் போகிறார். அதே மாதிரி ஓவராக பணக்காரத் திமிருடன் அலைந்து திரிந்த உமையாள் மற்றும் ராமசாமிக்கும் மிகப்பெரிய அவமானத்தை சந்திக்கப் போகிறார்.

Trending News