Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

எழிலை வெறித்தனமாக காதலிக்கும் ஜானு.. அமிர்தா எடுத்த அதிரடி முடிவு!

எழிலை வெறித்தனமாக காதலிக்கும் ஜானு.. அமிர்தா எடுத்த அதிரடி முடிவு!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கணவனை இழந்த கைக்குழந்தையுடன் இருக்கும் அமிர்தாவிம்ட கண்ணியமாக நடந்து கொள்ளும் எழில் அவளைத் திருமணம் செய்து கொள்ளவும் விரும்புகிறான். இந்த விஷயம் அனைத்தும் அமிர்தாவின் மாமனார் மாமியாருக்கும் தெரியும். ஆனால் எழிலை ஏற்றுக்கொள்ளத் […]

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கணவனை இழந்த கைக்குழந்தையுடன் இருக்கும் அமிர்தாவிம்ட கண்ணியமாக நடந்து கொள்ளும் எழில் அவளைத் திருமணம் செய்து கொள்ளவும் விரும்புகிறான். இந்த விஷயம் அனைத்தும் அமிர்தாவின் மாமனார் மாமியாருக்கும் தெரியும்.

ஆனால் எழிலை ஏற்றுக்கொள்ளத் தயங்கும் அமிர்தாவின் மனம் மாறும் வரை காத்திருக்கலாம் என எழில் அமிர்தாவின் திருமணப் பேச்சு பற்றி யாரும் பேசாமல் அமைதியாக இருக்கின்றனர். ஆனால் தற்போது எழில் உடைய தோழி ஜானு எழிலுடன் நெருங்கிப் பழகுவதால் அது அமிர்தாவிற்கு பிடிக்கவில்லை.

அத்துடன் அமிர்தாவும் தற்போதைய எழிலை காதலிக்க தொடங்கி விட்டாள். இந்நிலையில் கோயிலுக்கு வந்திருந்த அமிர்தாவிடம் ஜானு எழிலை காதலிப்பதாகவும், ஆனால் அவன் உங்களைத்தான் காதலிக்கிறான் என்பதையும் தெரிவிக்கிறாள்.

எனவே ஜானுவை விட்டுவிட்டு தன்னை தான் எழில் முழுமையாக காதலிக்கிறார் என்பதை புரிந்து கொண்ட அமிர்தா, எழில் கோயிலில் வைத்து அமிர்தாவுக்கு தலையில் பூவை வைப்பது ஏற்றுக்கொள்கிறாள்.

அதன் பிறகு தலையில் பூ வைத்துக்கொண்டு வீட்டிற்கு செல்ல தயங்கும் அமிர்தாவிற்கு, பூ வைப்பதை வீட்டில் இருப்பவர்கள் நிச்சயம் விரும்புவார்கள் தயங்காதீர்கள் என ஆறுதல் அளிக்கிறான். உடனே அமிர்தா எழிலுடைய கையைப்பிடித்து, ‘உங்களை நம்பலாமா?’ என்று மறைமுகமாக தன்னுடைய காதலை தெரிவிக்கிறாள்.

உடனே எழில், ‘இப்போது இருக்கும் அன்புடனே வாழ்க்கை முழுவதும் என்னை நம்பி வாருங்கள். நான் உங்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்கிறேன்’ என உறுதி அளிக்கிறான். இதன் பிறகு எழில் தன்னுடைய அம்மா மற்றும் குடும்பத்தினரின் சம்மதத்துடன் விரைவில் அமிர்தாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறான்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.