Thalapathy Vijay: தாய் எட்டு அடி பாஞ்சா, குட்டி 16 அடி பாயும் சொல்லுவாங்க. அப்படி ஒரு விஷயத்தை தான் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் செய்திருக்கிறார்.
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் அப்பாவை தொடர்ந்து ஹீரோவாக வருவார் என பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவரோ தாத்தாவை மாதிரி இயக்குனராக களம் இறங்கி இருக்கிறார். முதல் படமே லைக்கா ப்ரொடக்ஷன்.
சஞ்சய் இயக்கத்தில் யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார்கள் என்று பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. அவர் தமிழ் ஹீரோக்களை எல்லாம் டீலில் விட்டுவிட்டு நடிகர் சந்தீப்பை ஹீரோவாக்கி இருக்கிறார்.
‘நோ என்ட்ரி’ன்னு சொன்ன பேரன்
இந்த நிலையில் மகன்தான் தன் கையை மீறி போய்விட்டார் பேரனை கைக்குள் வைத்துக் கொள்ளலாம் என எஸ் ஏ சந்திரசேகர் திட்டமிட்டு இருப்பார் போல.
பேரனிடம் கதை கேட்டதோடு மட்டுமில்லாமல், திரைக்கதையில் கொஞ்சம் மாற்றம் செய்யும்படி சொல்லி இருக்கிறார்.
ஆனால் ஜேசன் சஞ்சய் ரொம்பவும் கரராக உங்க சினிமா வேற எங்க சினிமா வேற இதுல தலை விடாதீங்க என்று சொல்லிவிட்டாராம்.
இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் தன்னுடைய மகன் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் முக்கிய பங்கு எடுத்திருக்கிறார்.
ஆனால் அவரை ஒரு வெற்றி நாயகனாக மாற்றியது பூவே உனக்காக படம் தான்.
அதன் பின்னர் ஒரு சில தருணங்களில் எஸ் ஏ சந்திரசேகர் விஜய்க்காக தேர்ந்தெடுத்த படங்கள் அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை.
என்னதான் தாத்தாவாக இருந்தாலும், அப்பாக்கு அவர் செஞ்சதெல்லாம் ஜேசன் சஞ்சய்க்கு கண்ணு முன்னாடி வந்து போயிருக்கும் தானே.