வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வாய்ப்பு கொடுத்து பேர் வாங்க நினைத்த லைக்காவுக்கு வச்ச ஆப்பு.. தளபதி மகன் சஞ்சய்யால் ஏற்பட்ட சிக்கல்

Lyca Productions – Jason Sanjay: கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில், லைக்கா தயாரிப்பு நிறுவனம் அசைக்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. முன்னணி ஹீரோக்களின் படங்களை தயாரிப்பதாக இருக்கட்டும், லோ பட்ஜெட் படங்களை தயாரித்து பெத்த லாபம் அடிப்பதாக இருக்கட்டும் இந்த நிறுவனம் பயங்கர பிளானோடு செயல்பட்டு, இவர்கள் இல்லை என்றால் இப்போதைக்கு தமிழ் சினிமாவே இல்லை என்ற நிலைமையை உருவாக்கி விட்டார்கள்.

அதிலும் கடந்த சில வாரங்களாக லைக்கா பயங்கர ட்ரெண்டில் இருப்பதற்கு காரணம், தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தான். சஞ்சய் ஹீரோ ஆவாரா அல்லது இயக்குனர் ஆவாரா என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், திடீரென லைக்கா சஞ்சய்யை நாங்கள் இயக்குனராக அறிமுகப்படுத்துகிறோம் என்று போட்ட பதிவு ஓவர் நைட்டில் ஓஹோ என கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறது.

Also Read:அவரு தளபதின்னா நீங்க சின்ன தளபதியா.? கூட்டத்தில் வெடித்த சர்ச்சை, வலது கையை கூப்பிட்டு கடித்துக் குதறிய விஜய்

திறமைக்கு வாய்ப்பு கொடுக்கிறோம் என்று லைக்கா வாயால் வடை சுட்டாலும், இது எல்லாமே வியாபார யுக்தி தான் என்று சினிமாவை பற்றி தெரியாதவர்கள் கூட சொல்லி விடுவார்கள். தமிழ் சினிமாவில் இப்போதைக்கு நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் விஜய்யின் மகனை நாம் தான் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற திட்டத்தோடு தான் வலை வீசி தூக்கி இருக்கிறது.

இதன் மூலம் பெயர் வாங்கி விடலாம் என மனக்கணக்கு போட்ட லைக்காவுக்கு, நெத்தியில் அடித்தது போல் பெரிய சிக்கல் ஒன்றை உருவாக்கி இருக்கிறார் ஜேசன் சஞ்சய். அதாவது லைக்காவின் திட்டத்தின் படி ஜேசன் அறிமுக இயக்குனர், எனவே படம் எப்படி இருந்தாலும் இசையால் தூக்கி நிறுத்தி விட வேண்டும் என்ற முடிவில், ராக் ஸ்டார் அனிருத்தை இசை அமைப்பாளராக போட வேண்டும் என சொல்லி இருக்கிறது.

Also Read:டிக்கெட் புக்கிங்கில் ஜெயிலர் சாதனையை முறியடித்த லியோ.. அப்போ 1000 கோடி வசூல் உறுதியா.?

இங்குதான் பெரிய ஆப்பை சொருகி இருக்கிறார் குட்டி தளபதி. அதாவது தன்னுடைய படத்தில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் மகன் அமீன் இசையமைக்க வேண்டும் என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம். ஏற்கனவே அறிமுக இயக்குனர் என்பதால் பதட்டத்தில் இருக்கும் லைக்காவுக்கு இசையமைப்பாளரும் புதிது என்றால் மொத்தமாய் சொதப்பி விடும் என பயம் வந்துவிட்டது.

ஏ ஆர் ரகுமானின் வாரிசை இசையமைப்பாளராக போட்டால் தான் படம் இயக்குவேன் என ஜேசன் மறைமுகமாக நிபந்தனை போட்டு விட்டார். பெருமைக்காக களத்தில் இறங்கி, இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் விழிப்பிதுங்கி நிற்கிறது லைக்கா நிறுவனம்.

Also Read:லியோ படத்தை மண்ணோடு புதைக்க திட்டம்போடும் உதயநிதி.. ரெட் ஜெயிண்ட்டை வைத்து விஜய்க்கு எதிராக எடுக்கும் முடிவு

Trending News