இயக்குனர் ஆகி அப்பாவுக்கே ஷாக் கொடுத்த ஜேசன் சஞ்சய்.. ஆனாலும் விஜய் ரொம்ப ஸ்ட்ரிக்ட் போல

Vijay – Jason Sanjay: கடந்த இரண்டு தினங்களாக சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய வைரல் ஆகி கொண்டிருக்கும் விஷயம் தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாக இருப்பது தான். ஜேசன் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே குறும்படங்கள் இயக்குவது மற்றும் அதில் நடிப்பது என அவ்வப்போது அப்டேட்டுகளை கொடுத்துக் கொண்டிருந்தார். இதனால் தமிழ் சினிமா ரசிகர்களும் அவருடைய என்ரியை அதிகம் எதிர்பார்த்து இருந்தார்கள்.

நடிகர் விஜய்யின் லியோ மற்றும் தளபதி 68 படங்களின் அப்டேட்டுகளை அடுத்தடுத்து எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு, திடீரென லைக்கா நிறுவனத்தின் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட இன்ப அதிர்ச்சி தான் ஜேசன் சஞ்சய் தங்கள் நிறுவனத்திற்கு படம் இயக்க இருக்கிறார் என்னும் செய்தி. இதிலிருந்து சமூக வலைத்தளத்தில் இந்த விஷயம் காட்டுத் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது.

Also Read:தளபதி-68 ல் ஜோதிகா வாய்ப்பை தட்டி பறித்த ஆன்ட்டி நடிகை.. ஓவர் அல்சாட்டியும் பண்ணதால் வந்த விளைவு

ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாக இருப்பது, விஜய் மூலம் அறிமுகப்படுத்தப்படாமல், நேரடியாக லைக்கா எப்பவும் தன்னுடைய அப்டேட்டை கொடுப்பது போல் சமூக வலைத்தளத்தில் கொடுத்திருந்தது. இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் ஜேசன் லைக்காவில் படம் பண்ண இருக்கிறார் என்பது விஜய்க்கே ஷாக்கான விஷயம் தானாம்.

விஜய் தன் மூலமாக தன்னுடைய மகன் சினிமாவுக்குள் வரக்கூடாது என்பதில் ரொம்பவும் உறுதியாக இருந்திருக்கிறார். தன்னுடைய சினிமா செல்வாக்கை மகனின் அறிமுகத்திற்கு பயன்படுத்த அவர் விரும்பவில்லை. மேலும் சினிமாவை பற்றி தனக்கு தெரிந்த எதையுமே மகன் ஜேசன் சஞ்சய்க்கு சொல்லிக் கொடுக்கவில்லையே. ஜேசனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது, அவருடைய சொந்த முயற்சி என்கிறார்கள்.

Also Read:ரஜினி, விஜய் ரசிகர்களை குதூகல படுத்திய ஷாருக்கான்.. ஜவான் மேடையை தெறிக்க விட்ட சூப்பர் ஸ்டார்

தளபதி விஜய் எப்படி தன் அப்பா மற்றும் அம்மாவிடமிருந்து சற்று ஒதுங்கியே இருக்கிறாரோ, அதேபோல்தான் மகனின் சினிமா ஆசையிலிருந்தும் ஒதுங்கி இருக்கிறார். ஜேசன் தன் படத்தின் கதையை அவரே லைக்கா நிறுவனத்திடம் சொல்லி, வாய்ப்பு வாங்கி இருக்கிறார். கதை கேட்டதும் பிடித்து போனதால் தான் அவருக்கு வாய்ப்பு கொடுத்ததாக லைக்கா நிறுவனத்தின் சார்பிலும் சொல்லப்பட்டிருக்கிறது.

விஜய் சினிமாவில் அறிமுகமாகியதிலிருந்து கடந்த பத்து வருடங்களுக்கு முன்னாள் வரை அவருடைய அப்பா சந்திரசேகரின் பங்களிப்பு அதிகமாகவே இருந்தது. ஆனால் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயை பொருத்தவரைக்கும் விஜய் அவருடைய விருப்பத்திற்கே விட்டிருக்கிறார். மேலும் விஜய்யின் மகன் என்பதால் வாய்ப்பு கிடைத்தது என்று வெளியில் சொல்லி விடக்கூடாது என்பதில் ரொம்பவும் ஸ்ட்ரிக்ட் ஆக இருக்கிறார்.

Also Read:நெல்சனை ஃபாலோ பண்ணும் அட்லீ.. விஜய்யால் அதிர்ந்த ஜவான் மேடை