வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சூர்யாவால் கொலை நடுங்கி போன திரையுலகம்.. உச்சகட்ட பயத்தில் ப்ராஜெக்ட் கே, ஜவான் படக்குழு

Actor Surya: சூர்யாவின் படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். ஏனென்றால் சிங்கம் படத்திற்கு பிறகு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சூர்யாவின் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு பாலாவின் இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

அதன்பிறகு இயக்குனருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வணங்கான் படத்திலிருந்து பாதியிலேயே வெளியேறி விட்டார். இதைத்தொடர்ந்து சிறுத்தை சிவா உடன் இணைந்து கங்குவா படத்தில் பணியாற்றி வருகிறார். 3d அனிமேஷனில் உருவாகி வரும் இப்படம் பத்து மொழிகளில் வெளியாக இருக்கிறது.

Also Read : ஒரே வார்த்தையில் தெறிக்க விட்ட சூர்யா.. அசுரத்தனமாக வெளிவந்த கங்குவா கிளிம்ஸ் வீடியோ

இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாள் இன்று என்பதால் கங்குவா படக்குழு கிளிம்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டது. முழுவதும் நெருப்பு மண்டலமாக சூழ்ந்த நிலையில் கடைசியில் சூர்யா நலமா என்று ஒற்றை வார்த்தையில் அலற விட்டுள்ளார். இதை பார்த்து இப்போது ஒட்டு மொத்த திரை உலகமுமே கொலை நடுங்கி இருக்கிறது.

அதாவது சிறுத்தை சிவாவின் முந்தைய படமான அண்ணாத்த படம் கலவையாக விமர்சனங்களை பெற்றது. ஆகையால் இந்த படத்தில் என்ன செய்து வைத்திருக்கிறாரோ என்ற எண்ணத்தில் தான் ரசிகர்கள் இருந்தனர். ஆனால் படு பயங்கரமாக வேலை பார்த்துள்ளார் என்பது கிளிம்ஸ் வீடியோ மூலம் தெரிகிறது. மேலும் சூர்யாவின் தோற்றமும் வித்தியாசமாக இருக்கிறது.

Also Read : ஜெய் பீம்-க்கு டஃப் கொடுக்க போகும் உண்மை சம்பவம்.. சூர்யாவுக்காக செதுக்கும் தேசிய விருது இயக்குனர்

இந்நிலையில் சமீபத்தில் ஷாருக்கானின் ஜவான் மற்றும் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ப்ராஜெக்ட் கே படங்களின் வீடியோக்கள் வெளியானது. ஆனால் இவை எல்லாமே இணையத்தில் ரசிகர்களால் கேலி, கிண்டல் செய்யப்பட்டது. ஆனால் கங்குவா வீடியோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஆகையால் சூர்யா படத்தால் மற்ற பிரம்மாண்ட படம் எடுத்த குழுவினர் கலகத்தில் இருக்கின்றனர். ஏனென்றால் இந்த படத்தினால் அவர்களது வசூல் பெரிய அளவில் பாதிக்கக்கூடும். அதோடு மட்டுமல்லாமல் சாதாரண கிளிம்ஸ் வீடியோவே இப்படி இருக்கும் பட்சத்தில் டீசர் மற்றும் ட்ரெய்லரை தெறிக்க விடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Also Read : பாலிவுட் மோகத்தில் லாபம் பார்க்க துடிக்கும் 4 நடிகர்கள்.. சுதா கொங்காரா வைத்து வலை விரிக்கும் சூர்யா

Trending News