வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அட்லி, ஷாருக்கான் கூட்டணி தேறியதா.? ஜவான் 3 நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்

Jawan Collection Report: தன்னுடைய பாலிவுட் கனவை ஷாருக்கான் மூலம் நிறைவேற்றி இருக்கும் அட்லி ஜவான் மூலம் தன் முதல் படியை எடுத்து வைத்துள்ளார். கடந்த ஏழாம் தேதி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் உலக அளவில் நல்ல கலெக்சனை பெற்று வருகிறது.

தமிழ் ரசிகர்கள் வழக்கம் போல அட்லியின் தில்லாலங்கடி வேலையை கண்டுபிடித்து விட்டாலும் பாலிவுட் ரசிகர்களுக்கு இப்படம் திருப்தியை தான் கொடுத்திருக்கிறது. அதனாலேயே ஜவான் அங்கு வசூலிலும் மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறது.

Also read: காப்பி அடித்தாலும் வசூலில் சோடை போகாத ஜவான்.. 2வது நாள் மொத்த வசூல் ரிப்போர்ட்

அதன்படி முதல் நாளில் உலக அளவில் இப்படத்திற்கு 120 கோடி கலெக்சன் கிடைத்திருந்தது. அதை தொடர்ந்து இரண்டாவது நாளிலும் ஜவான் 109 கோடிகளை தட்டி தூக்கி இருந்தது. இதன் மூலம் 200 கோடி கிளப்பில் அசால்டாக நுழைந்த ஷாருக்கான் மூன்றாவது நாளான நேற்றும் வசூல் வேட்டையாடினார்.

அந்த வரிசையில் ஹிந்தியில் 66 கோடிகளையும், தெலுங்கில் 5 கோடி மற்றும் தமிழில் 3.5 கோடி என இந்திய அளவில் 74.5 கோடிகளை ஜவான் வசூலித்திருந்தது. உலக அளவில் பார்க்கையில் மூன்றாவது நாள் மொத்த வசூல் மட்டுமே 140 கோடியாக இருக்கிறது.

Also read: ரெண்டே நாளில் ஜெயிலர் படத்தை பின்னுக்கு தள்ளிய ஜவான்.. சுட்டு போட்டாலும் வெற்றியை தக்க வைக்கும் அட்லி

அதைத்தொடர்ந்து நான்காவது நாளான இன்றும் படத்திற்கான வரவேற்பு நன்றாகவே இருக்கிறது. ஆக மொத்தம் ஜவான் வெளியான மூன்று நாட்களிலேயே கிட்டத்தட்ட 370 கோடிகளை நெருங்கி பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

அந்த வகையில் 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் போட்ட காசை தாண்டி ஷாருக்கானுக்கு லாபத்தை கொடுத்திருக்கிறது. இதன் மூலம் அட்லியும் தன்னுடைய அஸ்திவாரத்தை பலமாகவே போட்டிருக்கிறார். இனிமேல் அவர் தமிழை மறந்து மும்பையிலேயே செட்டில் ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

Also read: சமந்தாவின் காதல் காவியத்தை சுக்கு நூறாக்கிய ஜவான்.. முதல் நாள் என்ட்ரியிலேயே காலியான குஷி

Trending News