திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பொன்னியின் செல்வனை விட டபுள் மடங்கு வியாபாரமான ஜவான்.. பாலிவுட்டில் கெத்து காட்டும் அட்லி

இயக்குனர் அட்லி பாலிவுட்டில் ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கோலிவுட்டை சார்ந்த நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். நீண்ட காலமாக நடந்து வரும் ஜவான் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் எதிர்பார்ப்பாக்கப்படுகிறது. இந்தச் சமயத்தில் ஜவான் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தப் படத்தின் வியாபாரத்தை பார்த்து பாலிவுட்டே அதிர்ச்சடைந்து உள்ளது.

Also Read : லாஜிக்கே இல்லாமல் சீனை வைத்த அட்லி.. விழுந்து விழுந்து சிரித்த பட குழு

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர்கள் தொடர் வெற்றி படங்களை கொடுத்த வருவதால் பாலிவுட் இயக்குனர்கள் சற்று ஆட்டம் கண்டுள்ளனர். மேலும் பாலிவுட்டில் பெரிய நடிகர்களின் படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது.

இதுவரை தோல்வி படத்தையே கொடுக்காத அட்லி முதல் முறையாக ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். மேலும் ஷாருக்கானின் படமும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாக உள்ளது. இந்த சமயத்தில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தை அமேசான் ப்ரைம் 120 கோடிக்கு வாங்கி உள்ளது.

Also Read : மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்.. தெரியாமல் தலையை விட்டோமோ என புலம்பும் தனுஷ்

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை விட டபுள் மடங்கு வியாபாரம் ஆகிவுள்ளது ஜவான். அதாவது நெட்பிளிக்ஸ் நிறுவனம் 250 கோடி கொடுத்து ஜவான் படத்தை வாங்கி உள்ளது. இந்த மிகப்பெரிய வியாபாரத்திற்கு காரணம் அட்லி என்று கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் தளபதி விஜயை வைத்து தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி கொடுத்த அட்லி தற்போது பாலிவுட்டிலும் கெத்து காட்டி வருகிறார். இதனால் அட்லியின் மார்க்கெட் தற்போது பல மடங்கு உயர்ந்துள்ளது. மேலும் ஜவான் படத்தில் அட்லி சம்பவம் செய்திருப்பார் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

Also Read : ஷாருக்கான் கூட நடிக்க விஜய் சேதுபதி கேட்ட சம்பளம்.. ஆடிப்போன அட்லி

Trending News