ஜெயம் ரவிக்காக விட்டுக் கொடுத்த சூப்பர் ஹிட் படம்.. ஆனா படுகுழியில் விழுந்த விஜய்

Vijay : சினிமாவில் உச்சநிலையைத் தொட்ட நடிகர் யார் என்று கேட்டால் அனைவரும் சொல்லும் பெயர் விஜயாக தான் இருக்கும். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தளபதி விஜய்.

விஜய் பல படங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி ஹிட் கொடுத்திருந்தாலும், சில திரைப்படங்களில் ஹீரோ வாய்ப்பை விட்டுக் கொடுத்ததாகவும் சில சினிமா தகவல்கள் பரவி தான் வருகிறது.

விஜய் மறுத்த காரணங்கள்..

முதல்வன் படத்தில் அர்ஜுனுக்கு பதிலாக முதலில் விஜய்க்கு தான் அந்த வாய்ப்பு வந்தது. ஆனால் அரசியல் களம் என்பதால் விஜய் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.

விக்ரம் நடித்து ஹிட்டான தூள் திரைப்படத்திலும் விஜய்க்கு வாய்ப்பு காத்திருந்தது, ஆனால் அந்த படத்தின் கதாபாத்திரத்தில் நடிக்க போதுமான நேரம் இல்லாததால் அந்த படத்தை மறுத்து விட்டார்.

அனேகன், ஆட்டோகிராப் போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த பொழுது, அவர் வேறு ஒரு திரைப்படங்களில் கவனம் செலுத்தியதால் இதை தவறவிட்டார்.

விஷால் நடித்த திரைக்கு வந்து பயங்கர ஹிட் கொடுத்த சண்டக்கோழி படத்திலும் விஜய்க்கு வாய்ப்பு வந்தது. ஆனால் கதை சற்று பிடிக்காததால் அதையும் தட்டிக் கழித்து விட்டார் விஜய்.

விஜய் இப்படி சினிமாவில் நிறைய வாய்ப்புகளை தவறி விட்டோம், படங்களை கழித்தும் இருக்கிறார். இந்நிலையில் ஜெயம் ரவிக்கு விஜய் ஒரு நல்ல கதைக்களம் கொண்ட திரைப்படத்தை விட்டுக் கொடுத்ததுக்காக தகவல்கள் பரவி வருகிறது.

தனி ஒருவன் திரைப்படத்திற்கு முதலில் இயக்குனர் மோகன்ராஜ் படத்தின் ஹீரோவாக விஜய்யை தான் அணுகினார். ஆனால் தளபதி விஜய் ஜெயம் ரவியை ஹீரோவாக போட்டால் நல்லா இருக்கும் என்று அவர் பெயரை பரிந்துரைத்துள்ளார்.

இதெல்லாம் சரிதான் ஆனால் தனி ஒருவன் என்ற நல்ல படத்தை விட்டுவிட்ட தளபதி புலி என்ற திரைப்படத்தை கடைசியில் தேர்ந்தெடுத்திருக்கிறாரே என்பது தற்போது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →