Jayam Ravi escaped with a big bow to Rajini: ஜெயம் ரவி சினிமாவிற்குள் நுழைந்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆன நிலையிலும் தற்போது வரை தனக்கான ஒரு இடத்தை பிடிப்பதற்காக போராடிக் கொண்டு வருகிறார். அதற்கு காரணம் 2 படங்கள் ஹிட் ஆகிவிட்டால் அடுத்து ஐந்து படங்கள் தோல்வியை பெற்றுவிடும். அதனாலேயே தற்போது வரை ஒரு ஆவரேஜ் ஹீரோ என்ற இமேஜுடன் சுற்றி வருகிறார்.
இவர் எப்பொழுதெல்லாம் துவண்டு போய் இருக்கிறாரோ அப்பொழுது இவருடைய அண்ணன் மோகன் ராஜா இவரை கை கொடுத்து தூக்கி விடும் விதமாக ஏதாவது ஒரு படத்தில் இணைந்து விடுவார். ஆனால் தற்போது வரை அப்படி எந்த ஒரு படமும் வெளிவரததால் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறார். சரியாக சொல்ல வேண்டும் என்றால் கோமாளி படத்திற்கு பிறகு எந்த ஒரு படமும் சரியாக ரீச் ஆகவில்லை.
இடையில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படம் இவருக்கு ஒரு டர்னிங் பாயிண்டாக திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஆனாலும் அதன் பிறகு வெளிவந்த இறைவன் படம் மிக மொக்கையாக தோல்வி படமாக முத்திரை குத்தி விட்டது. இதனை தொடர்ந்து எப்படியாவது ஒரு படத்தை வெற்றியாக கொடுத்து விட வேண்டும் என்று போராடி வருகிறார்.
Also read: தியேட்டர்ல இந்த படத்தை ஓட்ட முடியாது.. இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி தவிக்கும் ஜெயம் ரவி
அந்த வகையில் இயக்குனர் ஆண்டனி பாக்கியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள சைரன் படத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கிறார். இதில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளார்கள். மேலும் இப்படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் பேனரில் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருக்கிறார். ஆரம்பத்தில் இப்படத்தை ஓடிடி-யில் தான் ரிலீஸ் பண்ணப் போகிறோம் என்று சொல்லி இருந்தார்கள்.
ஆனால் அது வதந்தி தான், தற்போது இப்படத்தை தியேட்டரில் ரிலீஸ் பண்ணிவிடலாம் என்று முடிவெடுத்து விட்டார்கள். காரணம் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த இறைவன் மற்றும் அகிலன் இந்த இரண்டு படங்களுமே மிகப்பெரிய தோல்வி படங்களாக அமைந்தது. அதனால் சைரன் படம் வெற்றி அடையும் என்ற மொத்த நம்பிக்கையும் வைத்து திரையரங்குகளில் ரிலீஸ் பண்ண போகிறார்கள்.
அந்த வகையில் பிப்ரவரி மாதம் 9ம் தேதி ரிலீஸ் பண்ணுவதாக இருந்தது. ஆனால் அதே நாளில் ரஜினியின் லால் சலாம் படம் ரிலீஸ் ஆகப்போகிறது. அதனால் ஜெயம் ரவி நமக்கு எதுக்கு வம்பு என்று நினைத்து ரஜினிக்கு பெரிய கும்பிடு போட்டுவிட்டு சைரன் ரிலீஸ் தேதியை பிப்ரவரி 16ம் தேதிக்கு மாற்றிவிட்டார். இந்தப் படமாவது ஜெயம் ரவிக்கு வெற்றி கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.