புதன்கிழமை, ஜனவரி 22, 2025

எட்டு ஆண்டுகளில் தன்னோடு சேர்த்த 6 இயக்குனர்களையும் வளர்த்துவிட்ட ஜெயம் ரவி.. இந்த நல்ல மனசு யாருக்கு வரும்.!

தமிழ் சினிமாவிற்கு தன்னுடைய அண்ணன் மோகன் ராஜாவின் படங்களின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ஜெயம் ரவி. அதன் பிறகு இவர் பிற இயக்குனர்களுடன் இணைந்து பல தோல்வி படங்களை கொடுத்தாலும், கடந்த எட்டு வருடத்தில் 6 புதுமுகம் இயக்குனர்களை அறிமுகம் செய்துள்ளார். இந்த நல்ல மனசு யாருக்கு வரும் என ரசிகர்கள் ஜெயம் ரவியை குறித்து பெருமைப்படுகின்றனர்.

ரோமியோ ஜூலியட்- இயக்குனர் லட்சுமணன்: 2015 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் லட்சுமணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, ஹன்சிகா உடன் சேர்ந்து நடித்த நகைச்சுவை காதல் திரைப்படம் தான் ரோமியோ ஜூலியட். இதில் ஹன்சிகா பணக்கார வாழ்க்கை வாழ வேண்டும் என காதலை உதறிவிட்டு சென்றாலும் கடைசியில் காதல்தான் ஜெயிக்கும் என்பதை லட்சுமணன் இந்த படத்தில் அழகாக காட்டினார். இந்தப் படத்தை பார்க்கும்போது அறிமுக இயக்குனர் இயக்கிய படம் என சுத்தமாகவே தெரியாது. அந்த அளவிற்கு மிகச் சிறப்பாக இந்தப் படம் அமைந்திருக்கும்.

பூலோகம்- இயக்குனர் என் கல்யாண கிருஷ்ணன்: அறிமுக இயக்குனர் என். கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி திரிஷாவுடன் இணைந்து நடித்த படம் தான் பூலோகம். இந்த படத்திற்கு வசூல் ரீதியாக பெரிய வரவேற்பு கிடைக்காவிட்டாலும், இதில் ஜெயம் ரவியின் வித்தியாசமான நடிப்பை பார்க்க முடிந்தது. ஜெயம் ரவி அறிமுக இயக்குனருக்கு நிறைய வாய்ப்பு கொடுத்திருக்கிறார், அதிலும் என். கல்யாண கிருஷ்ணன் இந்த படத்தில் கதையை சொன்னதும் உடனே அதில் நடிக்க ஒத்துக் கொண்டது, அவருக்கு இருக்கும் பெருந்தன்மையை காட்டியது.

கோமாளி- இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்: ஜெயம் ரவிக்கு 2019ல் அமைந்த நல்ல ஒரு படம்தான் கோமாளி. இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கினார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜெயம் ரவி கொடுத்த வாய்ப்பு தான் அவரை தமிழ் சினிமாவிற்கு அடையாளப்படுத்தியது. இந்த படத்திற்குப் பிறகு பிரதீப் தானே இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் சூப்பர் ஹிட் அடித்த படமாகும். இந்த படத்திற்குப் பிறகு அடுத்ததாக பிரதீப், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியானது.

அடங்கமறு – கார்த்திக் தங்கவேல்: அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேலு இயக்கத்தில் ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் தான் அடங்கமறு. இந்தப் படத்தின் கதை ரொம்பவே வித்தியாசமாக இருக்கும். படத்தில் ஒவ்வொரு காட்சியும் கணிக்க முடியாத அளவுக்கு இந்த படத்தை கார்த்திக் தங்கவேலு இயக்கினார். இந்தப் படத்தில் எந்தவித தயக்கமும் இன்றி அறிமுக இயக்குனருக்கு ஜெயம் ரவி கொடுத்த வாய்ப்பு தான் தரமான படம் தமிழ் சினிமாவிற்கு வர காரணமாக அமைந்தது. இந்த படத்தில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதியைக் கண்டு வெகுண்டெழும் இளைஞரின் ஆக்ரோஷம் படத்தை பார்த்தவர்களுக்கும் பற்றி எரிய வைத்தது.

சைரன்- இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ்: அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவியுடன் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் வெளியான படம் தான் சைரன். இந்தப் படத்தின் இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம், விஷாலின் இரும்புத்திரை போன்ற படங்களிலும் பணியாற்றியவர். இந்தப் படத்தில் காமெடி மட்டுமல்லாமல் கதையுடன் கூடிய கேரக்டரில் யோகி பாபு, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கு வசூல் ரீதியாக பெரிய அளவு வரவேற்பு கிடைக்காவிட்டாலும் அறிமுக இயக்குனருக்கு ஜெயம் ரவி வாய்ப்பு கொடுத்து தூக்கிவிட நினைத்ததால் பலரும் பாராட்டினார்கள்.

ஜீனி- இயக்குனர் அர்ஜுனன்: அறிமுக இயக்குனர் அர்ஜுனன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜை உடன் தொடங்கப்பட்டது. இந்தப் படத்தில் கீர்த்தி செட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கேபி உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். ஏஆர் ரகுமான் படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படம் 100 கோடி பட்ஜெட்டில் ஐசரி கணேசன் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இந்த படத்தை தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

இவ்வாறு ஜெயம் ரவி வளர்ந்து கொண்டிருந்த போது எட்டு வருடத்தில் மட்டும் இந்த 6 இயக்குனர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அதில் பல பேர் பெரிய இயக்குனர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். தான் வளரும் பொழுது மற்றொருவரை சேர்த்து வளர்த்து வரும் எண்ணம் சில நடிகர்களுக்கு மட்டுமே இருக்கும். அந்த வரிசையில் ஜெயம் ரவி இந்த நற்செயலை செய்து வருவதால் தமிழ் சினிமா இன்னும் ஆரோக்கியமாக இருக்கும்.

Trending News