வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

கேரியரில் இல்லாத அளவு மெகா பட்ஜெட் படத்தில் நடிக்கும் ஜெயம் ரவி.. பிளாப் நாயகனுக்கு அடித்த ஜாக்பாட்

Jayam Ravi : ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தில் வெற்றி கண்டாலும் அவர் தனியாக நடித்து சமீபத்தில் வெளியான எந்த படங்களுமே பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இப்போது ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்.

பூமி படத்தில் தொடங்கி அகிலன், சைரன், இறைவன் என அடுத்தடுத்து எல்லாமே ஜெயம் ரவிக்கு தோல்வியில் முடிந்தது. இந்த சூழலில் ஜெயம் ரவிக்கு இப்போது ஜாக்பாட் ஒன்று அடித்து இருக்கிறது.

தொடர்ந்து தோல்வி படம் கொடுத்து வந்தாலும் ஜெயம் ரவி இப்போது பிரம்மாண்ட பட்ஜெட் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். ஐசாரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தான் இந்த படம் உருவாக இருக்கிறது.

ஐசாரி கணேஷ் தயாரிப்பில் ஜெயம் ரவி

ஜெயம் ரவி கேரியரில் மிக முக்கியமான படமாக பார்க்கப்படும் இந்த படம் கிட்டத்தட்ட 120 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் புவனேஷ் அர்ஜுனன் இயக்க இருக்கிறார்.

அதுவும் இந்த படம் விஜய்யின் புலி பட சாயலில் ஃபாண்டசி படமாக உருவாகிறது. ஆகையால் கண்டிப்பாக ரசிகர்களை கவரும்படியாகத்தான் இந்த படம் அமையும் என படக்குழு பெரிதும் நம்பி இருக்கின்றனர்.

சிம்பு போன்ற பெரிய நடிகர்களின் படங்களை ஐசாரி கணேஷ் தொடர்ந்து தயாரித்து நல்ல லாபத்தை பெற்று வந்தார். ஆனால் அவருடைய தயாரிப்பில் சில படங்கள் ரிலீஸ் ஆகாமல் தேங்கியுள்ள நிலையில் இப்போது ஜெயம் ரவியை வைத்து முதலீடு செய்ய இருக்கிறார்.

Trending News