புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இவர் ஜெயம் ரவி காட்டில் மழைதான்.. ஒரே பாட்டில் பெரிய ஆளான கதையாக இருக்கே

ஜெயம் ரவி தமிழ் நடிகர்களில் ஒருவர். ஒரு காலத்தில் பெண்களின் Favourite-ஆக இருந்த இவர் பல வெற்றி படங்களை கொடுத்தார். ஆனால் சில காரணங்களால் சில காலங்கள் அவரால் நல்ல கதை தேர்ந்தெடுத்து நடிக்க முடியவில்லை. தன்னுடைய 100 சதவீதத்தையும் நடிகர் ஜெயம் ரவி கொடுத்தாலும்,படத்தின் கதை சரி இல்லாததால் தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில், பட விவரங்களில் துவங்கிய சண்டை, ஜெயம் ரவி க்கும் ஆர்த்திக்கு பூதாகரமாக வெடித்தது. இந்த நிலையில், தற்போது விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார் ஜெயம் ரவி. கடந்த 15 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்துவந்த அவர்களுக்குள் எந்த சச்சரவும் இல்லாமல் இருந்தது. ஆனால் கடந்த சில காலங்களாகவே இருவருக்கும் தினமும் பிரச்னை வருகிறது என்று தகவல்கள் வெளியாகின

இதை தொடர்ந்து இவர்கள் விவாகரத்து செய்யவிருக்கிறார். ஆர்த்திக்கு விருப்பமில்லை என்றாலும், ஜெயம் ரவி தனது முடிவை திட்டவட்டமாக கூறிவிட்டார். இந்த நிலையில், இப்போதெல்லாம் அவர் தான் அடுத்தடுத்து நடிக்க கூடிய படங்களில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

இனி அடைமழை தான்..

ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து ‘ஜீனி’ மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன. இந்தப் படத்தின் பணிகளை முடித்துவிட்டு கணேஷ் பாபு இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் ஜெயம் ரவி.

இதனிடையே, சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் – ஜெயம் ரவி சந்திப்பு நடைபெற்று இருக்கிறது. இந்தச் சந்திப்பில் தன்னிடம் உள்ள கதைகள் குறித்து ஜெயம் ரவியிடம் பேசியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். அவருக்கு சில கதைகள் பிடிக்கவே, அடுத்த சந்திப்பில் முழுக்கதையும் சொல்வதாக கூறியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

இந்தப் படத்தினை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமே தயாரிப்பதற்கும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் ஜெயம் ரவி – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி இணைவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இனி தொட்டதெல்லாம் இவருக்கு வெற்றி என்றே சொல்லலாம்.. சிலர் இதை பார்த்து, ஜெயம் ரவி காட்டில் இனி அடை மழை தான் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News