புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஜெயம் ரவி-ராஜேஷ் கூட்டணியில் கை கொடுத்ததா பிரதர் செண்டிமெண்ட்.. அசர வைக்கும் 2ஆம் நாள் கலெக்சன்

Brother movie review: சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற படங்களின் மூலம் தன்னை ஒரு காமெடி கிங்காக நிரூபித்தவர் இயக்குனர் எம் ராஜேஷ். அதை தொடர்ந்து அவர் இயக்கிய சில படங்கள் அவருக்கு பெரிய சருக்கலை கொடுத்தன.

இந்த நிலையில் மீண்டும் தன்னுடைய காமெடி கலந்த சென்டிமென்ட் உடன் ஜெயம் ரவியுடன் கைகோர்த்து பிரதர் படத்தை கொடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் நீண்ட நாளுக்கு பிறகு அக்கா தம்பி செண்டிமெண்ட் பற்றி இந்த படம் பேசி இருக்கிறது.

ராஜேஷ் காமெடியான படங்கள் எடுப்பதோடு, சில உறவு சிக்கல்களையும் பேசுவதில் நேர்த்தியானவர். அதைத்தான் இந்த படத்திலும் முயற்சி செய்து இருக்கிறார். மனதில் பட்டதை அதன் பின்விளைவுகளை பற்றி யோசிக்காமல் பேசக்கூடிய குணமுடையவர் ஜெயம் ரவி.

இதனால் அவருடைய வீட்டில் இருக்கும் பலருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அவருடைய அக்காவான பூமிகா வீட்டிற்கு அவரை அனுப்பி வைக்கிறார்கள். அங்கு ஜெயம் ரவியால் பூமிகாவின் மாமனாருக்கு பிரச்சனை ஏற்பட பூமிகாவும் ரவியோடு தன் வீட்டுக்கு திரும்புகிறார்.

அதன் பின்னர் ஜெயம் ரவியின் அப்பா உன் அக்காவை தயவு செய்து அவருடைய கணவருடன் சேர்த்து வைத்து விடு என சொல்ல அதற்கு ஜெயம் ரவி முயற்சி செய்வதுதான் இந்த படம். இவர்களுக்கு பஞ்சாயத்து பேசுபவராக பிரியங்கா மோகன் இந்த படத்தில் நடித்திருக்கிறார்.

ராஜேஷ் பொறுத்த வரைக்கும் அவருக்கு காமெடி எந்த அளவுக்கு பிளஸ் ஆக இருக்கிறதோ அதே அளவுக்கு மைனஸ் ஆக தான் இருக்கும். இந்த படத்தில் அப்படி ஒரு நிலைமை தான் ஏற்பட்டு இருக்கிறது.

VTV கணேஷ் வரும் காமெடி காட்சிகள் அவ்வளவாக ரசிப்பதாக இல்லை. இருந்தாலும் ஜெயம் ரவியின் விறுவிறுப்பான நடிப்பு மக்கள் மனதை கவர்கிறது. பிரதர் சென்டிமென்ட் கையில் எடுத்திருக்கும் ராஜேஷ் அக்கா தம்பி உறவு பற்றி இன்னும் அழுத்தமாக சொல்லி இருக்கலாம். இருந்தாலும் அக்கா தம்பி உடன் பிறந்தவர்களுக்கு கண்டிப்பாக இந்த படம் ஒரு ஞாபக அலையை ஏற்படுத்தும்.

2ஆம் நாள் கலெக்சன்:

தீபாவளி தினத்தான வியாழக்கிழமை அன்று ரிலீஸ் ஆன பிரதர் படம் முதல் நாளில் 2.75 கோடி வசூல் செய்தது. நேற்று வெள்ளிக்கிழமை 2.05 கோடி வசூல் செய்தது. மொத்தத்தில் கடந்த இரண்டு நாட்கள் கலெக்ஷன் மட்டும் 4.8 கோடி ஆகும்.

Trending News