வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பாடகி உடன் தொடர்பா.? மௌனம் கலைத்த ஜெயம் ரவி

Jayam Ravi : ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் விவாகரத்து செய்தி அண்மையில் வெளியாகவே பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதாவது தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய உள்ளதாக முதலில் ஜெயம் ரவி தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து ஆர்த்தி தனக்கு தெரியாமல் தன்னிச்சையாக ஜெயம் ரவி இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறியிருந்தார். மேலும் அவரை சந்திக்க பலமுறை முயற்சித்தும் முடியாமல் போனது. நானும் என் குழந்தைகளும் தவித்து போய் இருக்கிறோம். மேலும் என் மீது ஆதாரமற்று சுமத்தப்படும் குற்றங்களுக்கு மறுக்காமல் இருந்தால் அது உண்மையாகிவிடும்.

இதனால் என் குழந்தைகளும் பாதிக்கப்படும் என்று ஆர்த்தி கூறி இருந்தார். அதன்பிறகு பிரச்சனை பூதாகரமாக ஜெயம் ரவிக்கும் பாடகி ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் வர ஆரம்பித்தது. இந்நிலையில் பிரதர் பட புரமோஷனுக்காக ஜெயம் ரவி பல்வேறு இடங்களுக்கு சென்று வருகிறார்.

ஆர்த்தி உடனான விவாகரத்து பற்றி பேசிய ஜெயம் ரவி

அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெயம் ரவியின் விவாகரத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், சில மாதங்களுக்கு முன்பாகவே விவாகரத்து பெரும் முடிவில் தான் இருப்பதாக ஜெயம் ரவி கூறி இருக்கிறார். இரண்டு முறை விவாகரத்து நோட்டீஸ் ஆர்த்திக்கு அனுப்பி உள்ளேன்.

இரண்டு மகன்களும் என்னிடம் தான் உள்ளார்கள். மூத்த மகனிடம் விவாகரத்தை பற்றி பேசியபோது மற்ற குழந்தைகள் போல இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று தான் நினைத்தான். மேலும் என்னுடைய பெற்றோர்களிடம் பேசிய போது அவர்கள் என் விருப்பத்திற்கு ஒற்றுக்கொண்டனர்.

மேலும் இதுவரையும் எந்த கிசுகிசுவிலும் சிக்காமல் இருந்த என் மீது தவறான தகவல் வந்து கொண்டிருக்கிறது. வேறு ஒரு பெண்ணுடன் தன்னை தொடர்பு படுத்தி பேசுவது தவறான செயல். ஆதரவற்ற அந்தப் பெண் பலருக்கு உதவி செய்து வருகிறார். நாங்கள் ஆன்மீக மையம் ஒன்று அமைக்க இருந்தோம்.

மேலும் என்னுடைய விவாகரத்தில் வேறு ஒருவரை பற்றி இணைத்து பேசுவது எனக்கு பிடிக்கவில்லை என்றும் ஜெயம் ரவி கூறி இருந்தார். ஜெயம் ரவியின் இந்த பேட்டிக்கு பிறகு ஆர்த்தி சொல்வது உண்மையா, இல்லை ஜெயம் ரவி சொல்வது உண்மையா என்ற குழப்பம் ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் ஆர்த்தி தான் முதலில் தனது இன்ஸ்டாகிராமில் ஜெயம் ரவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நீக்கி இருந்தார். அதன் பிறகு முதலில் ஜெயம் ரவி மீது குற்றச்சாட்டையும் ஆர்த்தி தான் வைத்திருக்கிறார். இப்போது தன் மீது விழுந்த பழிக்கு ஜெயம் ரவி விளக்கம் கொடுத்துள்ளார்.

மௌனம் கலைத்த ஜெயம் ரவி

Trending News