Actor Jayam Ravi: நடிகர் ஜெயம் ரவி சினிமாவில் காலடி எடுத்து வைத்து கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாகி விட்டது. இன்று வரை அவர் ஒரு ஆவரேஜ் ஹீரோவாகத்தான் இருக்கிறார். வெற்றி நாயகன் என்றும் இவரை சொல்லி விட முடியாது. அதற்கென்று தொடர் தோல்வி படங்களை கொடுப்பவர் இவர் இல்லை. இவருடைய சினிமா பாதை இன்று வரை நடுநிலையாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது.
ஜெயம் ரவிக்கு ஒரு கட்டத்தில் தொடர்ந்து வெளியான நிறைய படங்கள் தோல்வியை கொடுத்துக் கொண்டிருந்தன. அந்த நேரத்தில் அவருடைய சினிமா கேரியரை காப்பாற்றியது தான் பொன்னியின் செல்வன் படம். இனி ஒரு சில வருடங்களுக்கு ஜெயம் ரவியின் தோல்வி படங்கள் எதுவுமே வெளியில் பேசப்படாத அளவுக்கு பொன்னியின் செல்வன் படத்தில் வெற்றி அமைந்துவிட்டது. ரவிக்கு எப்போதுமே இது போன்ற அதிர்ஷ்டமான படங்கள் அமைவது உண்டு.
Also read: சைக்கோ தனமான மிருகங்களை வேட்டையாடும் ஜெயம் ரவி.. மிரள விட்ட இறைவன் பட ட்ரைலர்
சில வருடங்களுக்கு முன்பு ஜெயம் ரவி தொடர்ந்து ஒரே மாதிரியான கதைகளில் நடித்து, அந்த படங்கள் தொடர் தோல்வியை கொடுத்துக் கொண்டிருந்த பொழுது ஒட்டுமொத்த சினிமா உலகையும் திரும்பிப் பார்க்க வைத்த படம் தான் தனி ஒருவன். அந்த அளவுக்கு மாஸ் ஹிட் கொடுத்தது.
இந்த படத்தை இயக்கியவர் ரவியின் அண்ணன் மோகன் ராஜா தான். இவரைப் பொறுத்த வரைக்கும் பெரும்பாலும் ரீமேக் படங்களை தான் இயக்குவார், இவரிடம் சொந்த சரக்கு என்று எதுவுமே இல்லை என்று தமிழ் சினிமாவில் தவறான கருத்து இருந்தது. இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வெளியான படம் தான் தனி ஒருவன்.
Also read: சித்தார்த் அபிமன்யு-க்கு நிகர் இவர் தான்.. ஜெயம் ரவியோடு மோத போகும் ஸ்டைலிஷ் வில்லன்
இந்த படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இன்று வரை தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்றாக இது இருக்கிறது. ஆனால் தனி ஒருவன் படம் ஜெயம் ரவியை மனதில் வைத்து எழுதப்பட்ட கதை இல்லை என்று தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் மோகன் ராஜா இந்த படத்தை முழுக்க முழுக்க நடிகர் பிரபாஸை மனதில் வைத்து எழுதி இருக்கிறார்.
அந்த சமயத்தில் நடிகர் பிரபாஸ் வேறு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். அதற்குப் பின்னர் தான் மோகன் ராஜா, ஜெயம் ரவியை நடிக்க வைத்திருக்கிறார். அவனவன் எடுக்க முடிவு நமக்கு சாதகமானால் போதும் என்பது போல், பிரபாஸ் கைவிட்ட படம் ஜெயம் ரவியின் கேரியரை தலை நிமிர செய்திருக்கிறது.
Also read: வந்த ஸ்பீடுக்கு அதல பாதாளத்திற்கு செல்லும் ஜெயம் ரவி.. பணத்தாசையால் பறிபோக இருக்கும் மார்க்கெட்