செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

மொத்த பட்ஜெட்டையும் ப்ரீ பிசினஸில் அள்ளிய ஜெயம் ரவி.. JR30 உரிமையை தட்டி தூக்கிய நிறுவனம்

Actor Jayam Ravi: ஜெயம் ரவிக்கு இப்போ நல்ல காலம் பொறந்திருச்சு. சில வருடங்களாக தோல்வி படங்களை கொடுத்து வந்த அவருக்கு பொன்னியின் செல்வன் மிகப்பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதிலும் டைட்டில் கேரக்டரில் அவர் நடித்திருந்தது அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.

அதைத்தொடர்ந்து இப்போது அவர் படு பிஸியான நடிகராக மாறி இருக்கிறார். அந்த வகையில் நயன்தாராவுடன் இறைவன் படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர் அடுத்ததாக தனி ஒருவன் 2 படத்திலும் இணைய இருக்கிறார். இது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது.

Also read: அடேங்கப்பா ஜெயம் ரவியின் சொத்து மதிப்பு இவ்வளவா!. தனி ஒருவனாக சாதித்து காட்டிய ஹீரோ

இந்நிலையில் தற்போது அவருடைய 30வது பட பிசினஸும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவியுடன் பிரியங்கா மோகன் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை ஜீ நெட்வொர்க் கைப்பற்றி இருக்கிறது.

அதிலும் 37 கோடிக்கு இப்படம் வியாபாரம் ஆகி இருக்கிறது. அதை தொடர்ந்து ஹிந்தி டப்பிங் உரிமை 9 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ஆடியோ உரிமை 2.5 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

Also read: அடுத்த ராயப்பனை மிஞ்சும் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி.. மிரட்டும் சைரன் பட போஸ்டர்

இப்படி மொத்த பட்ஜெட்டையும் பட குழு ப்ரீ பிசினஸிலேயே அள்ளி இருக்கிறது. அதிலும் இந்த வியாபாரம் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வருவதற்கு முன்பே முடிந்துவிட்டதாம். அந்த வகையில் தற்போது விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக உள்ளது.

இப்படியாக ஜெயம் ரவியின் மார்க்கெட் இப்போது ஸ்டடி ஆகி இருக்கிறது. அந்த வகையில் இதையடுத்து சைரன் படத்திலும் நடித்து வரும் அவர் விரைவில் தனி ஒருவன் 2 படப்பிடிப்பிலும் பங்கேற்க இருக்கிறார். அதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Also read: சைரன் படத்தில் ஜெயம் ரவியின் கதாபாத்திரம்.. தனி ஒருவன் போல் வெற்றிக்காக எடுத்த அதிரடி முடிவு

Trending News