ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஜெயம் ரவியின் மார்க்கெட்டை சல்லி சல்லியாய் நொறுக்கிய 5 படங்கள்.. வந்த சுவடு தெரியாமல் போன அகிலன்

ஏராளமான பெண் ரசிகைகளை கொண்டிருக்கும் ஜெயம் ரவி இப்போது ரொம்பவும் பிசியான நடிகராக மாறி இருக்கிறார். இந்த வகையில் தற்போது அவரின் கையில் 3 படங்கள் இருக்கிறது. ஆனால் சில வருடங்களுக்கு முன்பு வரை அவருடைய திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. அப்படி அவருடைய மார்க்கெட்டை சல்லி சல்லியாய் நொறுக்கிய ஐந்து படங்கள் பற்றி இங்கு காண்போம்.

ஆதிபகவான்: அமீர் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு மக்களின் வரவேற்பை பெறவில்லை. அதிலும் இப்படத்தில் ஜெயம் ரவி இரு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். அதில் பகவான் பாய் என்ற வில்லன் கேரக்டரில் அவர் மிரட்டியது பலரையும் வியக்க வைத்தது. அது பாராட்டுக்களை பெற்றாலும் படம் வசூல் சாதனை பெறவில்லை.

Also read: பல வருடமாக கிடப்பில் போட்ட படம்.. தோல்வி பயத்தால் மீண்டும் கையில் எடுத்த ஜெயம் ரவி

போகன்: லக்ஷ்மன் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்தது. தனி ஒருவன் பட வெற்றிக்குப் பிறகு ஜெயம் ரவி மற்றும் அரவிந்த்சாமி இருவரும் இப்படத்தில் இணைந்தது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் இப்படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து வரவேற்பு கிடைக்கவில்லை. அதனாலேயே இப்படம் ஜெயம் ரவிக்கு ஒரு தோல்வி படமாக அமைந்தது.

வனமகன்: கடந்த 2017 ஆம் ஆண்டு ஏ எல் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சாயிஷா நடிப்பில் இப்படம் வெளிவந்தது. காட்டில் வசித்த ஒருவன் சிட்டிக்குள் வந்து படும் பாடு தான் இப்படத்தின் கதை. இதற்காக ஜெயம் ரவி கடுமையாக உழைத்து நடித்திருந்தார். ஆனாலும் இப்படம் அவருக்கான அங்கீகாரத்தை கொடுக்கவில்லை.

Also read: ட்விட்டரை தன்வசப்படுத்திய சோழர்கள்.. பொன்னியின் செல்வனால் திரிஷா, ஜெயம் ரவி ஏற்பட்ட பரிதாப நிலை

பூமி: கடந்த 2021 ஆம் ஆண்டு லக்ஷ்மன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நிதி அகர்வால் நடித்திருப்பார். கார்ப்பரேட் கம்பெனிகள் மற்றும் விவசாயம் பற்றி உருவாக்கப்பட்ட இந்த கதை நல்ல விமர்சனங்களை பெற்றாலும் வரவேற்பு பெறவில்லை. அந்த வகையில் இப்படமும் ஜெயம் ரவியின் தோல்வி பட வரிசையில் இணைந்தது.

அகிலன்: கடந்த மார்ச் மாதம் வெளிவந்த இப்படத்தை கல்யாண கிருஷ்ணன் இயக்கியிருந்தார். ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை தான் பெற்றது. அதிலும் படம் முழுக்க வரும் ஒரே மாதிரியான காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. அதனாலேயே இப்படமும் அவருக்கு ஒரு தோல்வி படமாக அமைந்தது.

Also read: பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் ஜெயம் ரவியின் 32 வது படம்.. தெலுங்கு நடிகைக்கு வலை வீசிய படக்குழு

இப்படி அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு போயிருந்த ஜெயம் ரவிக்கு பொன்னியின் செல்வன் மிகப்பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்த வகையில் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வரும் அவர் விரைவில் பாக்ஸ் ஆபிஸை கலக்கும் ஹீரோவாகவும் உருவெடுப்பார் என ரசிகர்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

Trending News