வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

மேஜிக் உலகத்திற்கு கூட்டிட்டு போகும் ஜெயம் ரவி.. ரிலீசுக்கு முன்பே கோடிகளை வாரி சுருட்டிய ஜீனி

Actor Jayam Ravi: ஜெயம் ரவிக்கு கடந்த சில திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அதனாலயே தற்போது அவர் ஜீனி மூலம் சர்ப்ரைஸ் கொடுக்க வருகிறார்.

ஐசரி கணேஷ் இயக்கத்தில் அர்ஜுனன் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருப்பது பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இப்படி பிரம்மாண்ட கூட்டணி இணைந்திருப்பதாலேயே இப்படத்தை ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். அதை இன்னும் அதிகரிக்கும் வகையில் தற்போது போஸ்டர் ஒன்றை படகுழு வெளியிட்டுள்ளது.

அதில் படத்தின் தலைப்புக்கு ஏற்ப ஜெயம் ரவி அலிபாபா பூதம் போன்ற தோற்றத்தில் இருக்கிறார். பொதுவாக இந்த மாதிரி மாயாஜால படங்களில் பூதம் ஜாடிக்குள் இருந்து தான் வெளியில் வரும்.

மாயாஜால வித்தை காட்டும் ஜெயம் ரவி

அதுதான் போஸ்டரிலும் இருக்கிறது. மேலும் பணம், தங்கம், உணவு பொருள் என அனைத்தும் நிறைந்திருக்கிறது. இதிலிருந்து ஜெயம் ரவி எந்த மாதிரியான ஒரு மேஜிக் அனுபவத்தை கொடுக்கப் போகிறார் என்பது புரிகிறது.

நிச்சயம் இது குழந்தைகளுக்கும் குதூகலமாக தான் இருக்கும். அதனாலேயே தற்போது படத்தின் வியாபாரமும் நன்றாக சூடு பிடித்துள்ளது.

மேஜிக் உலகத்திற்கு கூட்டிட்டு போகும் ஜெயம் ரவி

jayam ravi-genie
jayam ravi-genie

அதன்படி இப்படத்தின் சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஹிந்தி டப்பிங் உரிமம் ஆகியவை சேர்த்து 60 கோடிக்கு வியாபாரம் ஆகி இருக்கிறது. அதேபோல் தான் திரையரங்கு உரிமையும் லாபகரமாக இருக்கிறது.

இதை வைத்து பார்க்கும் பொழுது படம் ரிலீசுக்கு முன்பே தயாரிப்பாளருக்கு கிட்டத்தட்ட 80 கோடிக்கு மேல் லாபத்தை கொடுத்திருக்கிறது. அது மட்டுமின்றி ஜெயம் ரவியின் திரை வாழ்வில் அதிகபட்ச வியாபாரமான படமும் இதுதான்.

Trending News