வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

டிவி சீரியல் தான் உங்களுக்கு லாயக்கு.. ஜெயம் ரவியின் சைரனை கிழித்து தொங்க விட்ட ப்ளூ சட்டை

Blue Sattai Maaran-Siren: ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்த சைரன் நேற்று வெளியானது. ட்ரெய்லர் மூலம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

வழக்கம் போல் இப்படத்தையும் இஷ்டத்துக்கு கலாய்த்து தள்ளியுள்ள ப்ளூ சட்டை இந்திய சினிமாவில் இது லட்சம் தடவைக்கு மேல் வந்து நொந்த கதை என பங்கம் செய்திருக்கிறார். வழக்கமான பழிவாங்கும் கதையாக இருப்பதால் படத்தில் பெரிய அளவில் சுவாரஸ்யம் ஒன்றும் இல்லை.

செய்யாத தப்புக்கு ஜெயிலுக்குப் போகும் ஹீரோ தன் மகளை பார்க்க பரோலில் வருகிறார். ஆனால் வந்த வேலையை பார்க்காமல் கொலை செய்ய சென்று விடுகிறார். மறுபக்கம் ஹீரோயின் இறந்து விடுவார் என ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறார்கள்.

Also read: ஜெயம் ரவிக்கு சைரன் கை கொடுத்ததா, காலை வாரி விட்டதா.? முதல் நாள் கலெக்ஷன் ரிப்போர்ட்

அதன் பிறகு பிளாஷ்பேக் என்ற பெயரில் ஹீரோவுடன் காதல், கல்யாணம், மரணம் என இழுத்தடிக்கின்றனர். இப்படி நொந்து போன இந்த கதையை வைத்து ஒரு உப்புமா படத்தை எடுத்து இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் சீரியல் தான் லாயக்கு. அவர்களுடன் போட்டி போட்டால் தான் சரியாக இருக்கும்.

அந்த அளவுக்கு படத்தை சொதப்பி வைத்திருக்கிறார்கள். மலையாளம், தெலுங்கு படங்கள் எல்லாம் சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் இங்குதான் இந்த மாதிரி உப்புமா படத்தை எடுக்கிறார்கள். படத்தில் ஜெயம் ரவி ஆம்புலன்ஸ் டிரைவராக வருகிறார். ஆனால் உண்மையில் படத்தையே ஆம்புலன்சில் ஏற்றும் அளவுக்கு இருக்கிறது என சைரனை ப்ளூ சட்டை கொத்து பரோட்டா போட்டுள்ளார்.

Also read: Siren Movie Review – ஆடு புலி ஆட்டம் ஆடும் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ்.. சைரன் முழு விமர்சனம்

Trending News