புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ஜெயம் ரவியை தாங்கி பிடிக்குமா சைரன்.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

Siren Twitter Review: ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் இன்று சைரன் வெளியாகி இருக்கிறது. அனுபமா பரமேஸ்வரன், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.

siren-jayam ravi
siren-jayam ravi

ஏற்கனவே இதன் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் இன்று படத்தை பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். பழிவாங்கும் கதையாக இருக்கும் இப்படத்தில் அப்பா மகளின் பாசப்பிணைப்பு சிறப்பாக இருக்கிறது.

siren
siren

விசுவாசம், கடைக்குட்டி சிங்கம் பாணியில் சென்டிமென்ட் டச் உள்ள இப்படத்தில் ஜெயம் ரவியின் நடிப்பு அருமையாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். திரில்லர், ரிவெஞ்ச், விசாரணை என அனைத்தும் கலந்த கலவையாக படம் இருப்பதாகவும் கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

siren-movie
siren-movie

Also read: ஜெயம் ரவி கீர்த்தி சுரேஷின் ஆடு புலி ஆட்டம்.. சைரன் ட்ரெய்லர் எப்படி இருக்கு.?

அதேபோன்று அதிக ஹீரோயிசம் இல்லாமல் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ள ஜெயம் ரவிக்கு இந்த சைரன் முக்கியமான ஒரு படமாக இருக்கும். அவருக்கு நிகராக கீர்த்தி சுரேஷின் நடிப்பும், அனுபமா பரமேஸ்வரன் வரும் காட்சிகளும், யோகி பாபுவின் கவுண்டர் காமெடியும் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

review-siren
review-siren

மேலும் பிளாஷ்பேக் கதை புத்துணர்ச்சியோடு இருப்பதாகவும் இன்டர்வெல், கிளைமாக்ஸ் காட்சிகள் நன்றாக இருப்பதாகவும் பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆக மொத்தம் கடந்த சில தோல்விகளை சந்தித்த ஜெயம் ரவிக்கு இந்த சைரன் நல்ல ஒரு ஓப்பனிங் ஆக அமைந்துள்ளது.

siren-review
siren-review

Also read: சைரனை ஜெயம் ரவி மட்டும் நம்பி இல்ல.. 8 வருடத்திற்கு பின் ரீ என்ட்ரி கொடுக்கும் ஹீரோயின்

Trending News