வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அருள்மொழி வர்மனுக்கு அடித்த ஜாக்பாட்.. இதுவரை இல்லாத அளவிற்கு 5 பெரிய பட்ஜெட் படங்கள்

ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் பொன்னியின் செல்வன் படத்திற்கு முன், பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் என்றே பிரித்துக் கொள்ளலாம். ஏனென்றால் இந்த படம் வெளியாவதற்கு முன் ஜெயம் ரவி தொடர் பிளாப் படங்களை கொடுத்து சரிவை சந்தித்து வந்தார். இவரால் மீண்டும் மார்க்கெட்டை பிடிக்க முடியுமா என்ற சந்தேகமும் எழுந்தது.

ஆனால் பொன்னியின் செல்வன் படம் வெளியான பிறகு ஜெயம் ரவியின் மார்க்கெட் உச்சத்தை தொட்டுள்ளது. அதாவது இந்த படத்தில் கதையின் நாயகனாக அருள்மொழி வர்மன் என்ற கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார். மேலும் பொன்னியின் செல்வன் மாபெரும் வெற்றி அடைந்து வசூல் வேட்டையாடியது.

Also Read : எப்டுறா! ரக்சனுக்கு அமுல் பேபி மாதிரி ஜோடியா.? ஜெயம் ரவி வெளியிட்ட மறக்குமா நெஞ்சம் போஸ்டர்

இதன் விளைவாக தற்போது ஜெயம் ரவிக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்து வருகிறது. அதாவது ஜெயம் ரவியின் மாமியார் தயாரிப்பில் சைரன் என்ற படத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இப்போது சைரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது.

அடுத்ததாக பிரம்மாண்ட பட்ஜெட்டில் வேல்ஸ் தயாரிப்பில் ஐசரி கணேஷ் ஜெயம் ரவியின் படத்தை தயாரிக்கிறார். இப்படம் கிட்டத்தட்ட 100 கோடி பட்ஜெட்டில் உருவாகிறதாம். அதுமட்டுமின்றி ஜெயம் ரவிக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் இப்படத்தில் நடிக்கின்றனர்.

Also Read : ஜெயம் ரவியின் மார்க்கெட்டை சல்லி சல்லியாய் நொறுக்கிய 5 படங்கள்.. வந்த சுவடு தெரியாமல் போன அகிலன்

இதைத்தொடர்ந்து நயன்தாராவுக்கு ஜோடியாக இறைவன் என்ற படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார்.

இந்நிலையில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ஜெயம் ரவியின் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகமும் வர இருக்கிறது. இவ்வாறு பொன்னியின் செல்வன் படத்தால் ஜெயம் ரவிக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. இந்த படங்களில் மூலம் கண்டிப்பாக சினிமாவில் டஃப் நடிகர்களின் லிஸ்டில் ஜெயம் ரவி இடம்பெறுவார் என அவரது ரசிகர்கள் நம்புகிறார்கள்.

Also Read : தொடர் பிளாப்பால் 3 ஹீரோக்கள் ஒதுக்கிய கதை.. வான்டட்டாக தலையை கொடுத்த ஜெயம் ரவி

Trending News