Jayam Ravi’s Wife Aarthy: அண்ணன் இல்லாமல் தம்பி இல்லை, தம்பி இல்லாமல் அண்ணன் இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜா கூட்டணி வைத்து வெற்றி பெற்று வந்தார்கள். ஆனால் எப்பொழுது தனியாக போக தொடங்கினார்களோ, அப்பொழுதே இவர்களுடைய பாதை தடம் புரண்டு விட்டது. அந்த வகையில் ஜெயம் ரவி தனி ஹீரோவாக நடித்த அகிலன், இறைவன் மற்றும் சைரன் படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.
ஆனால் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடித்ததால் நல்ல வரவேற்பை பெற்றார். இதனை தொடர்ந்து எப்படியாவது தனி ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என்று ஜெயம் ரவி போராடி வருகிறார். அந்த வகையில் பிரதர், ஜீனி,காதலிக்க நேரமில்லை என்ற மூன்று படங்களில் கமிட்டாகி நடித்த வருகிறார்.
ஜெயம் ரவி மனைவி சமூக வலைதளத்தில் செய்த காரியம்
இந்த சூழ்நிலையில் இவரை சுற்றி கடந்த ஒரு வாரமாக சர்ச்சை வெடித்துக் கொண்டு வருகிறது. அதாவது ஜெயம் ரவி மற்றும் அவருடைய மனைவி ஆர்த்தியும் விவாகரத்து கேட்டு பிரிய போவதாக பல செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அது உண்மையா இல்லையா என்று எந்தவித பதிலும் அவர்கள் இருவரிடம் இருந்து இப்பொழுது வரை வரவில்லை.
இதனால் ரசிகர்கள் இது என்ன சினிமா பிரபலங்களுக்கு வந்த சோதனையா? யாருமே புருஷன் பொண்டாட்டியோட ஒத்துமையா இருக்க மாட்டாங்க போல, இப்படி அடுக்கடுக்காக ஒவ்வொருவரும் பிரிந்து கொண்டே வருகிறார்கள் என்று புலம்புகிறார்கள். அந்த வகையில் சமந்தா-நாகச் சைதன்யா முதல் தனுஷ் ஐஸ்வர்யா மற்றும் ஜிவி பிரகாஷ் சைந்தவி வரை பலரும் விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.
அந்த லிஸ்டில் ஜெயம் ரவியும் போகிற கூடாது என்று ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். அதாவது ஜெயம் ரவி, ஆர்த்தியை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ் என்ற மகன் இருக்கிறார். இந்த குழந்தை கூட டிக் டிக் டிக் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து ஒற்றுமையாக இருந்த இந்த தம்பதிகள் கடந்த மாதங்கள் வரை ஒன்றாக பல பேட்டிகளை கொடுத்து மன ஒத்தும் தம்பதிகளாக இருந்தார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்கு தற்போது விரிசல் ஏற்பட்டு விவாகரத்து ஆகப் போகிறதா என்று கேள்விகள் வந்த நிலையில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் சும்மா இருந்த மீடியாவை சொரிந்துவிட்ட விஷயமாக ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி எக்ஸ் வளத்தளத்தில் ஜெயம் ரவியுடன் இருந்த புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கி இருக்கிறார்.
ஏற்கனவே ஏகப்பட்ட கேள்விகள் போய்க் கொண்டிருக்கும் இந்த சர்ச்சையான நேரத்தில் ஆர்த்தி இப்படி செய்தது அப்போ உண்மையாகவே இவர்கள் பிரியப் போகிறார்களோ என்று நினைக்கத் தோன்றி விட்டது. ஏனென்றால் பிரபலங்களை பொறுத்தவரை பிரியப் போகிறார்கள் என்றால் முதலில் அவர்களுடைய பதிலை சமூக வலைதளங்களில் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை டெலிட் செய்து விடுவார்கள்.
அது போல தான் தற்பொழுது ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ஒன்றாக இருந்த புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கி இருக்கிறார். இது ரசிகர்களிடையே மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இருந்தாலும் ஆர்த்தி அவருடைய பயோவில் இருக்கும் கணவரின் ஐடியை தூக்கவில்லை. இதற்கெல்லாம் பதில் அளிக்கும் விதமாக ஜெயம் ரவி மற்றும் மனைவி ஆர்த்தி இதற்கு முற்றுப்புள்ளி வைத்தால் மட்டும் தான் ரசிகர்களிடம் இருக்கும் குழப்பம் தீரும்.
சர்ச்சையில் சிக்கிய ஜெயம் ரவி
- என்னது ஜெயம் ரவி விவாகரத்தா.?
- 4 ஹீரோயின்களுடன் ஜெயம் ரவி செய்யும் மாயாஜாலம்
- வில்லனோட கெத்து தான் என் ஹீரோவோட மரியாதை