புதன்கிழமை, ஜனவரி 8, 2025

Jayaram Daughter Marriage: லண்டன் மாப்பிள்ளைக்கு மாமனரான ஜெயராம்.. ஆர்ப்பாட்டமே இல்லாமல் நடந்த மகளின் திருமணம்

Jayaram Daughter Marriage: மலையாள நடிகர் ஜெயராம் தமிழில் பல படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் நகைச்சுவை உணர்வு ரொம்பவே அதிகம் என்றே சொல்லலாம். அதனால் பல படங்களில் நகைச்சுவை உணர்வை வெளிக்காட்டி மக்களின் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

தமிழில் முறைமாமன் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து கமலுடன் சேர்ந்து தெனாலி, பஞ்சதந்திரம் போன்ற வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். மேலும் இவருடைய மகன் காளிதாஸ் சினிமாவிற்குள் இளம் ஹீரோவாக நுழைந்து கிடைக்கும் வாய்ப்புகளை நடித்துக் கொண்டிருக்கிறார்.

லண்டன் மாப்பிள்ளைக்கு மகளை கொடுத்த ஜெயராம்

jayaram daughter marriage (2)
jayaram daughter marriage (2)

இதனை தொடர்ந்து இவருடைய மகள் மாளவிகா சினிமாவில் கொஞ்சம் கூட முகத்தை காட்டாமல் அவருக்கென்று ஒரு தனிப் பயணத்தை நோக்கி பயணித்து வந்தார். தற்போது நீண்ட நாள் காதலனை கரம் பிடிக்கும் விதமாக இன்று குருவாயூர் கோயிலில் ஜெயராமின் மகள் திருமணம் ஆர்ப்பாட்டமே இல்லாமல் நடந்து முடிந்து விட்டது.

கனவு காதலனை கைப்பிடித்த மாளிகை

jayaram daughter marriage
jayaram daughter marriage

ஜெயராமின் மகள் மாளவிகா, நவநீத் கிருஷ்ணன் என்பவரை காதலித்து வந்த நிலையில் குடும்பத்தில் இருப்பவர்களிடம் முழு சம்மதத்தை பெற்று கடந்தாண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. அந்த வகையில் இன்று இவர்களுடைய கல்யாணம் கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் சைலண்டாக நடைபெற்று முடிந்தது.

jayaram daughter marriage (1)
jayaram daughter marriage (1)

நவநீத் லண்டனில் Charted Account வேலை பார்த்து வருகிறார். இவருடைய அப்பா ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரி கிரீஷ் மேனன் மற்றும் நென்மாராவைச் சேர்ந்த வல்சலா ஆகியோரின் மகன் ஆவார். இப்படி பெரிய இடத்து சம்பந்தமாக இருந்தாலும் திருமணத்தை ஆர்ப்பாட்டமே இல்லாமல் நடத்தி முடித்திருக்கிறார்.

தற்போது இவர்களுடைய கல்யாண புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும் இந்த தம்பதியர்களுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அத்துடன் இந்த திருமணத்திற்கு முதல்வர் பினராயி விஜயன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

Trending News