புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

கதறிக் கதறி அழுத ஜீவா.. டேய் கதிர் உனக்கு இப்படி ஒரு தலையெழுத்தாடா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குடும்ப தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். வீட்டை விட்டு வெளியேறிய கதிர் வேலைக்காக பல இடங்களில் அலைந்து தற்போது ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். தனது மனைவியிடம் மளிகை கடையில் கணக்கு எழுதும் வேலை என பொய் சொல்லியுள்ளார்.

ஒருபுறம் கதிர் இல்லாமல் வியாபாரம் நஷ்டத்தை சந்தித்ததால் தனம் தற்போது கடையை பார்த்துக் கொள்கிறார். இந்நிலையில் கதிர் வேலை பார்க்கும் ஹோட்டலில் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை சப்ளை செய்வதற்காக ஜீவா அங்கே வருகிறார்.

அந்தச் சமயம் கதிர் ஏதோ தவறு செய்ததால் கடைக்காரர் அழைத்து திட்டுகிறார். அதைப்பார்த்து ஜீவா நிலைகுலைந்து போகிறார். நீ இங்க வேலை பாக்குறியா என அதிர்ச்சியாக ஜீவா கேட்க, வெளியில நில்லு அண்ணே, வேலைய முடிச்சுட்டு வந்தர்றேன் எனக் கதிர் கூறுகிறார்.

அதன்பின்பு உனக்கு என்ன தலையெழுத்தா, ஏன் இங்க வந்து வேலை பார்க்கிற, வா வீட்டுக்கு போலாம் என கண் கலங்கியபடி பேசுகிறார் ஜீவா. ஆனால் கதிர் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். ஜீவா எவ்வளவு வற்புறுத்தியும் கதிர் வீட்டுக்கு வர மறுக்கிறார்.

வேதனை தாங்க முடியாத ஜீவா கடைக்கு வந்து கதிர் ஹோட்டலில் வேலை பார்ப்பதை சொல்லி புலம்புகிறார். அப்போது கடையில் வேலை பார்ப்பவர் கதிர் நம்ம கடையிலேயே வேலை பார்க்கட்டும் வரச்சொல்லு என்கிறார். ஆனால் தனம் இது கதிர் எடுத்த முடிவு அவனுக்கு எது சரி, தப்பு என்று தெரியும் என்று கூறுகிறார்.

ஆனால் தனம் வெளியில் இப்படி எல்லோர் முன்னாடியும் பேசினாலும் உள்ளுக்குள் கதிரை நினைத்து வருந்துகிறார். ஒருவேளை கதிர் ஹோட்டலில் தான் வேலை பார்க்கிறார் என்பது முல்லைக்கு தெரியவந்தால் கண்டிப்பாக கதிர் மீது கோபப்படுவார். மேலும் நாமலே ஒரு ஹோட்டல் ஆரம்பிக்கலாம் என்ற முடிவை எடுக்க வாய்ப்புள்ளது.

Trending News