சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

பட வாய்ப்பு இல்லாததால் புது ரூட்டை பிடித்த ஜீவா.. அர்ஜுனுக்குகே டஃப் கொடுப்பார் போல!

ஜீவா தற்போது வெற்றி படங்கள் அவ்வளவாக அமையாமல் இருக்கிறார். இந்நிலையில் OTT தளத்தில் ஒரு புதிய ரூட்டை உருவாக்கி இருக்கிறார். இவருடைய துள்ளலான பேச்சு, கலக்கல், காமெடியால் மீண்டும் மக்களின் மனதில் இடம் பிடித்து சினிமாவில் ஒரு ரவுண்டு வர வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

ஆரம்ப காலங்களில் ராம், கற்றது தமிழ், சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் என நல்ல நல்ல கதாபாத்திரங்களை கொடுத்த ஜீவாவுக்கு, கடந்த 10 வருடங்களாக எந்த வெற்றி பட வாய்ப்புகளும் அமையவில்லை. அதனால் இப்போது OTT யில் ஒரு புதிய பிளானை கொண்டு வந்து வந்திருக்கிறார்.

Also Read : 10 வருடமா படங்களே ஓடாமல் ஜீவா படும் பாடு.. கோடிக்கணக்கில் செலவு செய்ததால் வந்த வினை

ஜீவா, ஆஹா தமிழுடன் இணைந்து ‘சர்க்கார் வித் ஜீவா’ என்னும் விளையாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். இது ஜீவாவை ஒரு புதிய பரிமாணத்தில் மக்களிடையே காட்ட இருக்கிறது. இதை ஜீவா மகிழ்ச்சியாக ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தனது டிவிட்டரில் ஜீவா, “புதிய வடிவங்களை ஆராய்வது எப்போதுமே சவாலானது, ஆனால் சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வதால் இது மிகவும் சிறப்பானது. நான் கேம் ஷோக்களின் தீவிர ரசிகன்; ஒரு கேம் ஷோவுக்கான தொகுப்பாளராக எனது பயணத்தைத் தொடங்க ஆஹா தமிழ் தளம் கிடைத்துள்ளது .” என்று பகிர்ந்துள்ளார்.

Also Read : கதறிக் கதறி அழுத ஜீவா.. டேய் கதிர் உனக்கு இப்படி ஒரு தலையெழுத்தாடா!

ஜீவா, காபி வித் காதல், கோல்மால், வரலாறு முக்கியம் என்னும் அடுத்தடுத்து படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். ஜீவா ஏற்கனவே விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் நடன நிகழ்ச்சியில் நடுவராக கலந்து இருக்கிறார்.

ஆஹா OTT தளம் அதிகமாக பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஆகாஷ்வாணி, அம்முச்சி 2, மோஜிஸ் போன்ற சுவாரஸ்யமான பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதில் ஒன்றாக தான் ‘சர்க்கார் வித் ஜீவா’ உருவாகி கொண்டிருக்கிறது.

Also Read : மாமனார் சட்டையை பிடித்த ஜீவா.. சின்னாபின்னமான பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

Trending News