ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஜீவாக்கு நச்சுன்னு ஒரு முத்தம்.. கேப்ரில்லா இனி காலிதான்!

விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே 2  சீரியலில் உயிருக்கு உயிராக காதலித்த ஜீவா மற்றும் கேப்ரில்லா இருவரையும் பிரித்து, எதிர்பாராதவிதமாக ஜீவாவுக்கும் கேப்ரில்லாவின் அக்கா பிரியாவுக்கும் திருமணம் நடந்தது. அதன் பிறகு கேப்ரில்லாவுக்கும் ஜீவாவின் அண்ணன் பார்த்திபனுக்கும் திருமணம் ஆனது.

இவ்வாறு மாத்தி மாத்தி திருமணம் நடத்தி வைத்த ஜோடிகள் ஒரே வீட்டில் இருப்பதால் அவர்களால் காதலை மறந்து திருமண வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள முடியாமல் படாத பாடுபடுகின்றனர். ஒருபுறம் கேப்ரில்லாவை தன் வழிக்கு கொண்டு வர பார்த்திபன் அவள் வழியிலேயே சென்று கேப்ரில்லாவின் மனதை மாற்ற முயற்சி செய்கிறான்.

மறுபுறம் ஜீவா பிரியாவுடன் ஆதரவற்ற குழந்தைகளுடன் சேர்ந்து சுற்றுலாவிற்கு செல்கிறான். அங்கு பிரியாவுடன் நண்பராக பழக முயற்சி செய்யும் ஜீவா கொஞ்சம் கொஞ்சமாக பிரியாவை தன்னுடைய மனைவியாக ஏற்றுக் கொள்ள முயற்சிக்கிறான். திடீரென்று விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவன் ஒருவன் கடலில் எதிர்பாராத விதமாய் விழுந்து விடுகிறான்.

சூழல் இருக்கும் ஆபத்தான பகுதிக்கு யாரும் செல்ல தயங்கிய நிலையில், அந்த சிறுவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என ஜீவா கடலில் குதிக்கிறான். பிரியா இதைக் கண்ட பரிதவித்து நிற்கிறாள். வெகு நேரம் ஆகியும் ஜீவா திரும்பாததால் அழுதுகொண்டே இருக்கும் பிரியாவை அங்கிருப்பவர்கள் சமாதானப்படுத்துகின்றனர்.

கொஞ்ச நேரம் கழித்து ஜீவா கடலில் இருந்து அந்த சிறுவனை மீட்டெடுத்து அவனுடைய உயிரை காப்பாற்றி விடுகிறார். சந்தோசத்தில் பிரியா ஜீவாவுக்கு நச்சுன்னு முத்தம் கொடுக்க ஜீவா இனம்புரியாத உணர்வை அனுபவிக்கிறான். இதன் பிறகு ஜீவா கொஞ்சம் கொஞ்சமாக கேப்ரில்லாவின் காதலை மறந்து பிரியாவின் உண்மையான அன்பை புரிந்து கொண்டு இருவரும் கணவன் மனைவியாக இனிவரும் நாட்களில் வாழப் போகின்றனர்.

இதை பார்க்க முடியாமலும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாமலும், தன்னுடைய அக்கா ஜீவாவுடன் சந்தோசமாக வாழ்ந்தால் போதும் என கேப்ரில்லா தன்னுடைய கணவன் பார்த்திபனுக்கு மனைவியாக வாழவேண்டும் என்ற கட்டாயத்தில் அந்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு வாழ முயற்சிப்பாள்.

Trending News