புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தற்கொலை முடிவுக்கு போன விஜய் பட நடிகை.. மார்பிங் வீடியோவால் பரிபோன சினிமா வாழ்க்கை

Jeeva Movie Actress : சமீபத்தில் ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படம் மார்பிங் செய்து இணையத்தில் வெளியாகி பரபரப்புக்கு உள்ளானது. ஒருபுறம் தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றாலும் மற்றொருபுறம் நேர் எதிரான விஷயங்களும் நடந்து தான் வருகிறது. அந்த வகையில் ஜீவா பட நடிகை தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூறியிருக்கிறார்.

சிவா மனசுல சக்தி படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் அனுயா பகவத். தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். ஆனால் அடுத்தடுத்த படங்கள் அவருக்கு சரியாக போகவில்லை. மேலும் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் இலியானாவுக்கு சகோதரியாக நடித்து இருந்தார்.

இந்நிலையில் சில காலமாக தமிழ் சினிமாவில் காணாமல் போன அனுயா இப்போது ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதாவது பாடகி சுசித்ரா பல சினிமா பிரபலங்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருந்தார். தனுஷ், நயன்தாரா, அனிருத், ஆண்ட்ரியா என பல பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்.

Also Read : தங்க தட்டில் பிறந்த ஜீவாவின் சொத்து மதிப்பு.. டைம்பாஸுக்காக சினிமாவில் கலக்கும் வாரிசுகள்

அதில் நடிகை அனுயாவின் மார்பிங் வீடியோக்களும் வெளியானது. அதன் பிறகு சினிமாவில் தலை காட்டாமல் இருந்த அனுயா தன்னுடைய சினிமா வாழ்க்கை போவதற்கான காரணத்தை கூறியிருந்தார். அதாவது அந்த வீடியோ வெளியான போது மிகுந்த மன வருத்தத்தில் இருந்ததாக கூறிப்பிட்டு இருந்தார்.

மேலும் அந்த சமயத்தில் தற்கொலை முடிவுக்கும் சென்ற போது தனது குடும்பம் தான் உறுதுணையாக நின்றது. மேலும் சினிமா அதன் பிறகு தன்னை ஒதுக்கினாலும், என்னுடைய நடிப்பு திறமை மீது தனக்கு நம்பிக்கை உள்ளதாக அனுயா அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

suchi-anuya
suchi-anuya

Also Read : பெயரை கெடுத்து கந்தலாக்கிய ராஷ்மிகா மந்தனா.. பத்து முறை கடித்து குதறிய நடிகரால் நிஜ வாழ்க்கையில் சர்ச்சை

Trending News