செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

ஜீவாவை வச்சு செய்யும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. கதிர் மற்றும் கண்ணனால் பிரியும் சோகம்

குடும்பத்தின் ஒற்றுமையை மையமாக வைத்து ரசிகர்களை டார்கெட் செய்யும் விதமாக வந்த சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இது ஆரம்பத்தில் ஒர்க் அவுட் ஆகியிருந்தாலும் தற்போது இந்த சீரியலை கழுவி கழுவி ஊற்றாதவர்கள் யாரும் இல்லை. அந்த அளவிற்கு படும் மோசமாக போய்க்கொண்டிருக்கிறது. இவ்வளவு நாள் ஒற்றுமைதான் பலம் என்று கெட்டி கிடந்துகிட்டு இருந்தவங்க இப்பொழுது பணம் தான் எல்லாம் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இதற்கு பிள்ளையார் சுழி போட்டதே கண்ணன் பையன் தான். ஏற்கனவே ஜீவா மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு விட்டது. இப்பொழுது அதைத் தொடர்ந்து மீனாவின் தங்கை திருமணத்தில் ஏற்படும் குளறுபடியால் ஜீவாவுக்கு வர இருக்கும் அவமானத்தை அவர் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார் என்பது தெரியவில்லை. இதனால் அந்த வீட்டில் விரிசல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

Also read: மூர்த்தியை சரமாரியாக கேள்வி கேட்கும் ஜீவா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருந்து வெளியே போகும் ஜோடி

ஆனால் இதில் ஒரு லாஜிக்கும் கூட இல்லை என்று சொல்லலாம். ஏன்னா ஒரு வீட்டில் விசேஷம் என்றால் அண்ணன், தம்பி அனைவரும் சேர்ந்து பேசி எவ்வளவு மொய் பணம் செய்யலாம் என்று முடிவு செய்திருக்கலாம். அந்த ஒரு விஷயம் கூட இவங்க மூளைக்கு எட்டவில்லை என்றால் அப்புறம் என்னத்துக்கு இவங்க கூட்டு குடும்பம் என்று அலப்பறை பண்ணிக்கிட்டு இருக்காங்க.

மேலும் கண்ணன் தான் ஆர்வக்கோளாறில் ஏதோ பண்றான்னு பாத்தா நம்ம கதிர்க்கு என்ன ஆச்சுன்னு தெரியல. அவரும் கையில் பணத்தை பார்த்தவுடனே தன்னிச்சையாக முடிவு எடுத்து அவரு வேற வழியில் மொய் செய்கிறார். அப்புறம் கண்ணனை பத்தி சொல்லவே வேண்டாம் அவர் பேங்க் மேனேஜர் அவர் பங்குக்கு அவரும் மொய் செய்கிறார்.

Also read: அரைச்ச மாவை அரைச்சுகிட்டு இருக்காங்க.. இனி இவங்க கூட நடிக்க முடியாது என விலகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை

இவங்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டு முழிச்சுக்கிட்டு இருக்கிறது ஜீவா தான். இப்படி குடும்பமே சேர்ந்து அவரை வச்சு செய்றாங்க.  இதற்குத்தான் சொல்லுவாங்க ரொம்ப நல்லவராகவும் இருக்க கூடாது,  இளிச்சவாயனாவும் இருக்க கூடாது. ஆனால் இவர் இதில் எந்த ரகத்தை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.

இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் ஜீவா, அண்ணன் தான் வேணும், குடும்பம் தான் முக்கியம் என்று நினைத்தாலும் ஜனார்த்தன் கண்டிப்பா உள்ளே புகுந்து குட்டைய குழப்புவாரு. இன்னொரு விஷயம் இதுவே பழைய மீனாவாக இருந்திருந்தால் இந்நேரம் கதையே மாறி இருக்கும். ஆக மொத்தத்துல இந்த நாடகத்தில் எதையோ புதுசா காட்டணும்னு சொல்லிட்டு என்ன என்னமோ கம்பி கட்டுற வேலை எல்லாம் செய்றாங்க. அடுத்தடுத்த திருப்பங்களுடன் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Also read: கலாச்சாரத்தை சீர்குலைக்கும் ஈரமான ரோஜாவே 2.. லாஜிக்கே இல்லாமல் ஏழரை கூட்டும் சீரியல்

Trending News