செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

10 வருடமா படங்களே ஓடாமல் ஜீவா படும் பாடு.. கோடிக்கணக்கில் செலவு செய்ததால் வந்த வினை

சமீபத்தில் ஜீவா நடித்த படம் ஒன்று அதிக அளவு பட்ஜெட் செலவில் உருவாகி இருக்கிறது. மேலும் அந்த படத்திற்கு ஒரு அதிகப்படியான தொகையை நிர்ணயம் செய்ததால், விநியோகஸ்தர்கள் யாரும் வராமல் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஜீவாவிற்கு 2012 ஆம் ஆண்டிற்கு பிறகு எந்த படமும் வெற்றியடையவில்லை. சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு 2 படத்தை பெரிதாக எதிர்பார்த்தார். அந்த படமும் பெரிதாக அவருக்கு வெற்றியை தரவில்லை. நண்பன் படம் ஹிட் ஆனாலும் ஜீவா அதில் 3 நாயகர்களில் ஒருவராகவே நடித்திருந்தார்.

Also Read: நூறாவது படத்துக்கு மாட்டிய விலாங்கு மீன்.. ஜீவா அப்பா போட்ட பிரம்மாண்ட தூண்டில்

83 என்னும் ஹிந்தி திரைப்படத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றாலும், கோலிவுட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை, கடந்த பத்து வருடங்களுக்கு மேல் ஜீவாவுக்கு வெற்றி படம் ஏதுமில்லை.

திரைப்பட பாடலாசிரியர் பா.விஜய் முதன் முதலாக கலைஞர் கருணாநிதியின் வசனத்தில் இளைஞன் என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். பின்பு ஒன்றிரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்த இவர், இப்போது இயக்குனர் பரிமாணத்தை எடுத்திருக்கிறார்.

Also Read: சிம்பு தவறவிட்ட 5 மெகா ஹிட் படங்கள்.. இரண்டு வாய்ப்பை தட்டி சென்ற ஜீவா

பாடலாசிரியர் பா.விஜய் இயக்கத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் இணைந்து இருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் ராஷி கண்ணா, ராதா ரவி, ரோகினி, ஒய் ஜி மஹேந்திரன், KPY தீனா நடிக்கவிருக்கின்றனர்.

இந்த படத்திற்கு பா.விஜய் 22 கோடி என நிர்ணயம் செய்து இருக்கிறார். ஜீவாவின் படங்கள் தொடர்ச்சியாக வெற்றியடையவில்லை என்பதால் விநியோகஸ்தர்கள் இந்த படத்தை வாங்க யோசிக்கிறார்கள். இதனால் இந்த படம் ரிலீசாவதில் தடை ஏற்பட்டு இருக்கிறது.

Also Read: விக்ரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த ஜீவா.. இவ்வளவு பெரிய சான்ஸ் மிஸ் ஆயிடுச்சு

Trending News