ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

10 நாள் கூட தியேட்டரில் ஓடாத ஜீவாவின் 2 படங்கள்.. 20 வருடங்களுக்கு பிறகு கிடைத்த அங்கீகாரம்

தமிழ் சினிமாவில் சில வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருபவர் ஜீவா. இவர் ஆசைஆசையாய் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தற்போது ஜீவா, பொன்குமரன் இயக்கத்தில் சிவாவுடன் இணைந்து கோல்மால் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் இவர் நடிப்பில் வெளியான ராம் மற்றும் கற்றது தமிழ் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் வசூல் ரீதியாக மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தது. அதன் பிறகு ஜீவா நடித்த சிவா மனசுல சக்தி, தெனாவட்டு, கோ, நீதானே என் பொன்வசந்தம், யான் போன்ற படங்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது.

அமீர் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான திரைப்படம் ராம். இப்படத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட மகனாக ராம் கதாபாத்திரத்தில் ஜீவா நடித்திருந்தார். இப்படத்தில் அவருடைய அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் நடித்திருந்தார். ராம் படம் விமர்சன விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு திரையரங்குகளில் வெற்றி கிடைக்கவில்லை.

அதன்பிறகு ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் திரைப்படம் ஜீவாவிற்கு விமர்சன ரீதியாக பெரிய அளவில் வரவேற்பு பெற்றுக் கொடுத்தாலும் இப்படம் வெளிவந்த போது தியேட்டரில் பத்து நாள் கூட ஓடவில்லை. கற்றது தமிழ் படத்தை ரசிகர்கள் பார்க்க விரும்பவில்லை.

இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் பலரும் ரீல் பெட்டியை திருப்பி அனுப்பியுள்ளனர். அதனால் கற்றது தமிழ் படமும் எதிர்பார்த்த அளவு வசூல் பெறவில்லை. ஆனால் தற்போது கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு ராம் மற்றும் கற்றது தமிழ் படங்களுக்கு வரவேற்பு கிடைப்பதாக ஜீவா கூறியுள்ளார். இப்போது வரை எனக்கான அடையாளமே அந்த 2 படங்கள்தான் என்று வெளிப்படையாக கூறியுள்ளார் ஜீவா.

தற்போது ராம் மற்றும் கற்றது தமிழ் அகிய திரைப்படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதை பார்த்து ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். ஆனால் அப்படம் வெளியானபோது சரியான அங்கீகாரம் கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது என ஜீவா கூறியுள்ளார்.

Trending News