சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

மனோஜை மறைமுகமாக டார்ச்சர் பண்ணும் ஜீவா.. மீனாவிடம் பணத்தை கேட்டு சண்டை போடும் முத்து

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், விஜயாவிற்கு கடையில் பிரியாணி வாங்கிட்டு பார்வதி வீட்டிற்கு மீனா போகிறார். விஜயா ஏன் இவ்ளோ நேரம் என்று கேட்கும் பொழுது மீனா பிரியாணி வாங்கிட்டு வந்தேன் என்று சொல்லுகிறார். உடனே அதை எங்களுக்கு தட்டுல வைத்து எடுத்துட்டு பரிமாறிட்டு போ என்று சொல்கிறார்.

பிறகு மீனா எல்லா வேலையும் முடித்துவிட்டு கிளம்பும் பொழுது அங்கே காதல் ஜோடிகள் செய்யும் அலப்பறையை பார்க்கிறார். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சாப்பாடு ஊட்டி விடுவதை பார்த்த மீனா கண்டுக்காமல் போய்விடுகிறார். ஆனால் இந்த ஜோடிகளால் விஜயா நிச்சயம் பிரச்சனையில் மாட்டிக் கொண்டு ஜெயிலுக்கு போவது உறுதியாக தெரிகிறது. அப்பொழுது விஜயாவை காப்பாற்ற முதல் ஆளாக முத்து தான் போய் நிற்பார்.

வாங்கிய பணத்திற்கு மொத்தமாக பழி தீர்க்கும் ஜீவா

இதனை அடுத்து மீனாவின் தம்பி டிராபிக் போலீஸ் இடம் மாட்டுகிறார். காலேஜுக்கு போகும் பொழுது மது பாட்டிலையும் நிறைய வைத்திருப்பதால் டிராபிக் போலீஸ் அட்வைஸ் பண்ணினார்கள். அந்த நேரத்தில் முத்துவும் அங்கே வந்து மறைமுகமாக மீனாவின் தம்பிக்கு அட்வைஸ் பண்ணுகிறார். ஆனால் மீனாவின் தம்பி எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் அலட்சியப்படுத்துகிறார்.

பிறகு அனைவரும் வீட்டுக்கு வந்த நிலையில் விஜயா சாப்பிட்ட சாப்பாடு ஜீரணம் ஆகாமல் அவஸ்தைப்படுகிறார். உடனே ரோகிணி, இதுதான் சான்ஸ் என்று மீனாவிடம் நீங்கள் ஏன் அத்தைக்கு கடையில் வாங்கிக் கொடுத்தீர்கள். சாப்பிட்டது அவர்களுக்கு ஒத்துக்கொள்ளாமல் கஷ்டப்படுகிறார்கள் என்று சொல்கிறார். உடனே அங்கு இருந்த அண்ணாமலை, மீனா தான் வீட்டில் இருந்து சாப்பாடு எடுத்துட்டு போனாளே.

அப்புறம் ஏன் அதை சாப்பிடாமல் கடையில் பிரியாணி வாங்கி சாப்பிட்டாய் என்று கேட்கிறார். அப்பொழுது மீனா அந்த சாப்பாட்டை தர்மம் பண்ணியதை சொல்கிறார். இதனால் கோபப்பட்ட விஜயா வழக்கம்போல் திட்ட ஆரம்பிக்கிறார். ஆனால் முத்து, மீனா செய்தது சரிதான் என்று சப்போர்ட் பண்ணி பேசுகிறார்.

இதனை தொடர்ந்து மனோஜ் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது அந்த மொட்டை கடுதாசி நினைத்து புலம்பி தவிக்கிறார். இதைப் பற்றி எப்படியாவது அம்மாவிடம் சொல்ல வேண்டும் என்பதற்காக விஜயாவுக்கு போன் பண்ணி மொட்டை மாடிக்கு வர சொல்கிறார். தூக்கத்தில் எழுந்து போன விஜயாவிற்கு மொட்டைக் கடுதாசி பார்த்ததும் அதிர்ச்சையாகி நிற்கிறார்.

ஏனென்றால் அதில் விஜயாக்கு நெஞ்சு வலி வந்துவிடும், முத்து ஜெயிலுக்கு போவான், மனோஜ் தற்கொலை செய்து விடுவான் என்பது போல் பயமுறுத்தும் அளவிற்கு எழுதி இருக்கிறது. இதனால் விஜயாவும் பயப்பட ஆரம்பித்து விடுகிறார். இது மனோஜ்க்கு வந்த இரண்டாவது மொட்ட கடிதாசி. அந்த வகையில் மனோஜ் மற்றும் அவருடைய குடும்பத்தை பற்றி தெரிந்தவர் யாரோ ஒருவர் தான் இது போல ஒரு கடிதத்தை எழுதி கொடுக்கிறார்.

அதனால் மனோஜினால் ஏமாந்து போன ஜீவா தான் இந்த மாதிரி வேலை எல்லாம் செய்ய வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் 27 லட்ச ரூபாய் பணத்துக்கு வட்டி போட்டு மொத்தமாக 30 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டார். இதனால் கடுப்பான ஜீவா, மனோஜின் சந்தோஷத்தை பறிக்க வேண்டும் என்பதற்காக இந்த மாதிரி மொட்டை கடுதாசி மூலம் டார்ச்சர் செய்வது போல் தெரிகிறது.

அடுத்ததாக முத்துவின் நண்பர் பண பிரச்சனையால் புலம்பித் தவிக்கிறார். அப்பொழுது முத்து நீ எதற்கும் கவலைப்படாதே உனக்கு தேவையான பணத்தை நான் தருகிறேன் என்று சொல்லி வீட்டிற்கு வந்து மீனாவிடம் சேர்த்து வைத்த பணத்தை கேட்டு பிரச்சினை பண்ணுகிறார்.

ஆனால் மீனா கொடுக்க மாட்டேன் என்று சொல்லிய நிலையில் முத்து அதட்டி பணத்தை கேட்கிறார். அதற்கு மீனா அது உங்களுடைய பணம் மட்டும் இல்லை, அதில் என்னுடைய பணமும் இருக்கிறது என்று சொல்லி சண்டை போட ஆரம்பித்து விடுகிறார்கள்.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News