வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

மனோஜ்க்கு வார்னிங் கொடுத்த ஜீவா.. முத்து தொடங்கிய பிசினஸ், பயத்தில் ரோகினி எஸ்கேப் ஆகும் விஜயா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், பாட்டி வீட்டிற்கு வந்ததும் விஜயா வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சந்தோஷமாக ஒற்றுமையாக இருந்து சாப்பிடுகிறார்கள். அப்பொழுது பாட்டி, அண்ணாமலை மற்றும் விஜயாவை கோவிலுக்கு கூட்டிட்டு போயிட்டு வா என்று முத்துவிடம் சொல்கிறார்.

முத்துவும் சரி என்று சொல்லி நிலையில் ஏற்கனவே தேர்வு செய்து வைத்த செகண்ட்ஸ் காரை வீட்டிற்கு கொண்டுட்டு வாருங்கள். அந்த கார்ல மாமாவையும் அத்தையும் கோவிலுக்கு கூட்டிட்டு போகலாம் என்று மீனா ஐடியா கொடுக்கிறார். அதன்படி முத்து காரை வாங்கிட்டு வீட்டிற்கு வருகிறார்.

வந்ததும் மீனா அனைவரையும் கீழே கூட்டு போகிறார். பிறகு ரவி மற்றும் சுருதி முத்து மற்றும் மீனாவிற்கு வாழ்த்துக்கள் கூறுகிறார்கள். ஆனால் விஜயா மட்டும் எதுவும் சொல்லாமல் சந்தோசமும் படாமல் மூஞ்சியை தொங்க போட்டு இருக்கிறார்.

புலம்பித் தவிக்கும் மனோஜ்

பிறகு பாட்டி இவள் எப்போதும் அப்படித்தான், அதை பெருசாக எடுத்துக் கொள்ளாதே. நீ இதே மாதிரி பல கார்களை வாங்கி பிசினஸில் வெற்றி பெற வேண்டும் என்று பாட்டி வாழ்த்துகிறார். அப்பொழுது கார் பின் சீட்டில் அண்ணாமலை மற்றும் விஜயாவை உட்கார வைத்து மீனா முத்து கோவிலுக்கு கூட்டிட்டு போகிறார்கள்.

போகும் போது விஜயா மற்றும் அண்ணாமலை எதுவும் பேசாமல் தள்ளி தள்ளி உட்கார்ந்து போகிறார்கள். இவர்களை ஒன்னு சேர்க்கும் விதமாக முத்து தாறுமாறாக வண்டியை ஓட்டுகிறார். அப்பொழுது அண்ணாமலை, விஜயாவை இறுக்கி பிடித்து பத்திரமாக பாதுகாத்துக் கொள்கிறார். இதனைத் தொடர்ந்து மனோஜ்க்கு வந்த மொட்டை கடிதாசியை ரோகினிடம் காட்டுகிறார்.

ரோகிணி உன்னை யாரோ ஏமாற்றுவதற்காக இந்த வேலையை பார்த்திருக்கிறார்கள். அதனால் இதைப் பற்றி பெருசாக எடுத்துக் கொள்ளாதே என்று சொல்கிறார். ஆனால் பக்கத்தில் இருந்த ரோகிணியின் தோழி, ஒருவேளை இந்த லெட்டரை அனுப்பி வைத்தது ஜீவா கூட இருக்கலாம்.

உன்னை பற்றி அவளுக்கு தெரிந்திருக்கும். அதுதான் மனோஜிடம் சொல்வதற்கு முயற்சி எடுப்பது போல் தெரிகிறது என்று சொல்கிறார். இதை கேட்டதும் ரோகினி பதட்டத்தில் பயப்படுகிறார். ஆனால் எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று ரோகினின் தோழி சொல்லி சமாதானப்படுத்துகிறார்.

பிறகு இந்த மொட்டை கடுதாசியை பற்றி மனோஜ் இரவு நேரத்தில் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது விஜயா என்ன ஆச்சு என்று கேட்கிறார். அப்பொழுது அந்த மர்ம நபர் போட்ட கடிதத்தை விஜயாவிடம் சொல்லி புலம்புகிறார்.

இதைக் கேட்ட விஜயா, மறுபடியும் ஏதாவது ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொண்டு என்னை வம்புக்கு இழுக்காத. எதனாலும் உன் பொண்டாட்டி கிட்ட கேட்டு சரி பண்ணிக்கோ என்று சொல்லி விஜயா எஸ்கேப் ஆகிறார்.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News