புதன்கிழமை, ஜனவரி 22, 2025

குணசேகரனின் முகத்திரையை கிழிக்க வரும் ஜீவானந்தம்.. பச்சோந்தியாக மாறி அப்பாவை காலி பண்ண போகும் தர்ஷன்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், அஞ்சனா வாழ்க்கைக்காக சித்தார்த்தை கூப்பிட்டு பேசிய ஜனனி மற்றும் சக்தியிடம் கண்டிப்பாக நான் அஞ்சனாவை கைவிடமாட்டேன் என்று சித்தார்த் சத்தியம் பண்ணார். ஆனா சத்தியம் பண்ணிய கொஞ்ச நேரத்திலேயே அம்மா வந்ததும் வாயை மூடிக்கொண்டு பின்னாடியே போய்விட்டார்.

இதனை அடுத்து தர்ஷன் போலீஸிடம் மாட்டிய பொழுது சக்தி, ஜனனி வந்து தர்ஷனுக்கு சப்போர்ட்டாக பேசினார்கள். ஆனால் அது போலீஸிடம் எடுபடாமல் போய்விட்டது. பிறகு தர்ஷன் என்னுடைய அப்பா குணசேகரன் என்று சொன்னதும் போலீஸ் குணசேகரனுக்கு போன் பண்ணி வரவழைத்தார்.

குணசேகரன் வந்ததும் உங்க அம்மா ஒத்த பைக் வாங்கி கொடுத்துட்டு தேவையில்லாத பிரச்சனையில் சுற்றி கொண்டிருக்கிறார். இப்ப தெரிதா காலேஜ்ல ஃபீஸ் கட்ட முடியாமல் எங்க வந்து நிற்கிறாய் என்று. எப்போதுமே என்னை அண்டி பிழைத்தால் மட்டும்தான் கெத்தாக இருக்க முடியும். அதை நீ புரிந்து கொள் என்று தர்ஷனை பிரைன் வாஷ் பண்ணி பேசுகிறார்.

பணத்தை வைத்து லாக் பண்ணும் குணசேகரன்

தர்ஷனும் எதுவும் சொல்லாமல் அப்பா கூட காரில் ஏறி போய்விட்டார். வீட்டுக்கு போனதும் ஈஸ்வரி, தர்ஷனிடம் கேள்வி கேட்கிறார். அதற்கு தர்ஷன் உங்க பேச்சைக் கேட்டு எங்க அப்பாவை எதிர்த்து நின்னது பெரிய தப்பு. உங்க சுயநலத்துக்காக பெத்த பிள்ளைகளை எந்த அளவுக்கு வேணாலும் பாடாபடுத்தி எடுப்பீங்க என்று ஈஸ்வரியை பார்த்து கேட்கிறார்.

ஒருவேளை குணசேகரன் பக்கத்தில் சாய்ந்தது போல் டிராமா பண்ணி கூடவே இருந்து குழி பறிக்க போறாரா அல்லது பணம் தான் பெருசு என்று பச்சோந்தியாக மாறிவிட்டார் போல. இன்னும் கொஞ்ச நாளில ஞானம் மற்றும் கதிரும் பணம் இல்லாமல் ஒன்னும் இல்லை என்று குணசேகரன் கூட ஒட்டிக் கொள்வார்கள் போல.

இதனை அடுத்து உமையா, மகனை கூட்டிட்டு குணசேகரன் வீட்டிற்கு போகிறார். போனதும் தர்ஷினியை வரவழைத்து பக்கத்திலே சித்தார்த்தை உட்கார வைக்கிறார். இதை பார்த்து வழக்கம் போல் சவால் விடுவதும் வாய் சவடாலில் பேசுவது மட்டுமே அந்த வீட்டில் உள்ள மருமகள் செய்து வருகிறார்கள்.

ஆனால் குணசேகரன் அவர் நினைத்தபடி எல்லாத்தையும் நடத்தி விடுவார் போல. அந்த வகையில் வருகிற வெள்ளிக்கிழமை இவர்களுக்கு நிச்சயதார்த்தம் பண்ணி வைப்பேன் என்று குணசேகரன் உறுதியாக இருக்கிறார். இதற்கு பேசாமல் 18 வயதுக்கு கீழ் உள்ள தர்ஷினிக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறார் என்று கம்பளைண்ட் பண்ணலாம்.

அல்லது தர்ஷினியின் மனநிலை இப்பொழுது சரியில்லை என்று மருத்துவ ரீதியாக கூட புகார் கொடுக்கலாம். இதையெல்லாம் விட்டுவிட்டு நாங்கள் கல்யாணத்தை தடுத்து நிறுத்துவோம் என்று வாயால சொல்லுவது எரிச்சலை உண்டாக்கிறது. ஒருவேளை இதற்கு முடிவு கட்டும் விதமாக ஜீவானந்தம் வந்து அனைத்து பிரச்சினைக்கும் காரணம் குணசேகரன் என்று முகத்திரையை கிழிப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

Trending News