சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

எதிர்நீச்சல் 2வில் வெத்துவேட்டாக இருக்கும் ஜீவானந்தம்.. குணசேகரனை டம்மியாக்க வரும் விஜய் டிவி சீரியல் வில்லி

Ethirneechal 2: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், ஆணாதிக்கத்தை கௌரவமாக நினைத்து அதிகாரம் செய்து படித்த பெண்களை வீட்டிற்குள் முடக்கும் பிற்போக்குத்தனமான விஷயங்களை செய்யக்கூடியவர் தான் குணசேகரன். இப்படிப்பட்டவரிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் நான்கு பெண்களின் கண்ணீர் கதைகள் எப்படி லட்சியத்தை நோக்கி போராட போகிறது என்பதுதான் எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற சீரியலின் முக்கிய பங்காக இருக்கிறது.

அந்த வகையில் குணசேகரன் செய்த அட்டூழியத்தை தட்டிக் கேட்கும் விதமாக நான்கு பெண்கள் சேர்ந்து அவருக்கு சிறை தண்டனை கிடைப்பதற்கு வழி செய்து விட்டார்கள். இதனை தாங்கிக் கொள்ள முடியாத குணசேகரனின் அம்மா விசாலாட்சி, மகனின் குணங்கள் தெரிந்த பின்பும் மகனை விட்டுக் கொடுக்காமல் மருமகள்களை குறை சொல்லி வந்தார்.

ஆனால் தற்போது முடியாத காலத்தில் தள்ளாடும் வயதில் நமக்கு ஒரு ஆறுதல் சொல்லும் விதமாக இருந்த ஈஸ்வரியை கண்ணும் மனசும் தேடுகிறது. இதனால் ஈஸ்வரியை பார்க்க வேண்டும் என்று அடம் பிடிக்கும் விசாலாட்சிக்கு ஈஸ்வரி கொடுத்த பதில் வர முடியாது என்று. ஆனாலும் ஜீவானந்தம் கொடுத்த அறிவுரையின்படி ஈஸ்வரி எப்படியும் குணசேகரன் வீட்டிற்கு மறுபடியும் போய்விடுவார்.

இதற்கிடையில் இந்த ஜீவானந்தம் கேரக்டர் எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற சீரியலில் தேவைப்படுகிறதா என்ற கேள்விக்குறி தற்போது நிலவி வருகிறது. ஏனென்றால் இப்பொழுது ஆரம்பித்த கதையின் படி நான்கு மருமகளின் கேரக்டருமே ரொம்பவே சிறப்பாக அமைந்து வருகிறது. அவர்களை வைத்து இந்த நாடகத்தை வெற்றிகரமாக கொண்டு போகலாம்.

தயவு செய்து ஜீவானந்தம் கேரக்டர் வேண்டாம் இப்பொழுது வரை அவருடைய கேரக்டர் சும்மாதான் இருக்கிறது என்று மக்கள் கமெண்ட் பண்ணி வருகிறார்கள். மேலும் குணசேகரன் தற்போது ஜெயிலில் இருப்பதாகவும் அவரை வெளியில் கொண்டு வருவதற்கு தம்பிகள் முயற்சி எடுத்து வருகிறார்கள். இருந்தாலும் இந்த குணசேகரன் வெளியே வந்த பிறகு மறுபடியும் அவருடைய அதிகாரம் செல்லுபடி ஆகாது.

அத்துடன் இந்த கேரக்டரை இனி கொஞ்சம் கொஞ்சமாக கம்மி பண்ணலாம் என்பதற்காக குணசேகரனை டம்மியாக்கி இவருக்கு பதிலாக இன்னொரு வில்லியை கொண்டு வரப் போகிறார்கள். அவர் யாரென்றால் விஜய் டிவி சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்து வரும் ரோகிணி என்கிற சல்மா.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் இவருடைய கேரக்டர் பலரையும் எரிச்சல் படுத்தும் விதமாக இருந்தாலும் இவருடைய நடிப்புக்கு யாரும் ஈடு இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப அவருடைய நெகட்டிவ் கேரக்டரை சரிவர செய்து வருகிறார். அந்த வகையில் இவர் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற சீரியலில் வில்லியாக வரப்போவதாக தகவல் வெளியாயிருக்கிறது.

Trending News