Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியல் கிட்டத்தட்ட 750 எபிசோடு வரை வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள். ஆனால் கிட்டத்தட்ட 1500 எபிசோடு காண கதை வைத்திருந்தும் டிஆர்பி ரேட்டிங்கில் அடிவாங்கியதால் அவசர அவசரமாக முடிவை கொண்டு வந்து விட்டார்கள். இதனால் கிளைமேக்ஸ் காட்சி எதிர்பார்த்து அளவிற்கு இல்லாமல் போய்விட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த நாடகம் முடிந்த நிலையிலும் எதிர்நீச்சல் சீரியலை கண் தேடுது பார்க்க ஆர்வமாக இருக்கிறது என்று மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் கதைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இது பற்றி ஏற்கனவே பல விஷயங்களை பார்த்த நிலையில் தற்போது முதன் முறையாக இந்த நாடகத்தை எடுத்து வந்த திருச்செல்வம் என்கிற ஜீவானந்தம் வாயை திறந்து பேசி இருக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியலுக்கு பதில் சொல்லிய ஜீவானந்தம்
அதாவது நேற்று கொடுத்த பேட்டியில் அவர் கூறியது கதை மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. நான் நினைத்தால் 2000 எபிசோடு வேண்டுமானாலும் கொண்டு போக முடியும். ஆனால் சொல்ல முடியாத சில காரணங்களால் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் நான் இருந்தேன். இதனால் கடைசி ஒரு வாரங்களில் மட்டும் தான் ஆர்டிஸ்ட்களுக்கே தெரியும் இந்த நாடகம் முடியப்போகிறது என்று.
அப்படி இருந்தும் அவர்களுக்கு எந்த காரணத்துக்கொண்டு முடிய போகிறது என்று நான் சொல்லவில்லை. இருந்தாலும் நான் யோசித்து வைத்த கதைக்கு மறுபடியும் உயிர் கொடுப்பேன். அது கூடிய விரைவில் நடக்கும். ஆனால் எதிர்நீச்சல் இரண்டாம் பாகமாக வராது. அதற்குப் பதிலாக இந்த மாதிரி ஒரு கதைகளத்துடன் வித்தியாசமான காட்சிகளை வைத்து மக்களை திருப்திப்படுத்துவேன் என்று கூறியிருக்கிறார்.
அதற்கான வேலைகள் இன்னும் சில நாட்களில் நடைபெற இருப்பதால் தான் அந்த வீட்டை கூட நான் இன்னும் மூடவில்லை. அதை வைத்து தான் கதையும் நகரப் போகிறது. அதற்காக இப்பொழுது வரை அந்த வீட்டுக்கு வாடகை கொடுத்து வருவதாக கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் இதில் முக்கிய கதாபாத்திரமாக சக்தி இருப்பார்.
அதனால் அவரை வைத்து நாடகம் இருப்பதால் இப்பொழுதே சக்தியை சன் டிவி புக் பண்ணி விட்டது. மேலும் இதில் குணசேகரன் கதாபாத்திரத்திற்கு இடமில்லை. அவர் இல்லாமலேயே பெண்களின் நம்பிக்கையும் கனவையும் நிறைவேற்றும் விதமாக விறுவிறுப்பான கதைகளை வேறு ஒரு விதமாக கொடுக்க பிளான் பண்ணி இருப்பதாக ஜீவானந்தம் அளித்த பேட்டியில் கூறுகிறார்.
அந்த வகையில் இன்னும் கூடிய விரைவில் சன் டிவி மூலம் மறுபடியும் ஜீவானந்தம் என்டரி கொடுக்கப் போகிறார். அத்துடன் அதில் நடித்த சில ஆர்டிஸ்ட்களையும் தொடர்ந்து இதில் நடிக்க வைப்பதற்கு தயாராக இருக்கிறார்.
குணசேகரன் போட்ட ஆட்டம்
- Gunasekaran: ரேணுகா மனக்கஷ்டத்தை போக்கிய சர்வாதிகாரி
- ஒரிஜினல் குணசேகரனை டம்மியாக்கிய ஜீவானந்தம்
- அப்பத்தா மறுத்ததால் குணசேகரனுக்கு ஆப்பு வைத்த ஜீவானந்தம்