வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அப்பத்தா மறுத்ததால் குணசேகரனுக்கு ஆப்பு வைத்த ஜீவானந்தம்.. கதிர் முடிவால் கண்ணீர் வடிக்கும் நக்கல் ராணி

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், நந்தினி ஆசைப்பட்ட மாதிரி சொந்தக்காலில் நின்னு ஜெய்ப்பதற்கு மிளகாய் கம்பெனி பிசினஸ்க்கு அஸ்திவாரத்தை போட்டு விட்டார். அதே மாதிரி ஜனனி மற்றும் சக்தியும் ஒரு நல்ல வேலையில் சேர்ந்து விட்டார்கள். இதனைத் தொடர்ந்து ஒரு தொழிலதிபராக மாறுவதற்கு ஜனனி அடுத்த கட்ட முயற்சி பண்ணப் போகிறார்.

அத்துடன் ரேணுகாவும் பரதநாட்டியம் சொல்லிக் கொடுக்கும் கிளாஸ் ஆரம்பித்து அதன் மூலம் ஆசைப்பட்ட கனவை நிறைவேற்றப் போகிறார். இப்படி ஒவ்வொருவருக்கும் நல்லது நடந்து வருவதால் குணசேகரன் இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அவருடைய திட்டத்திற்கு எதிராக தற்போது பாலாங்கிணற்றில் விழப் போகிறார்.

கணவரின் வருகைக்காக காத்து நிற்கும் நந்தினி

அதாவது முன்வினை செய்த பாவத்திற்கு எப்பொழுதும் தண்டனை உண்டு என்று சொல்வதற்கு ஏற்ப அராஜகத்தின் உச்சகட்டமாக அட்டூழியம் பண்ணி வந்த குணசேகரனின் ஆட்டத்திற்கு முடிவு கட்டியாச்சு. அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலின் கதை தற்போது முடிவை நோக்கி பயணித்து வருவதால் ஒவ்வொரு கேரக்டரையும் க்ளோஸ் பண்ணி வருகிறார்கள்.

அந்த வகையில் அப்பத்தாவின் இறப்பு ஒரு கேள்விக்குறியாக இருந்த நிலையில், அப்பத்தாவிடம் நீங்கள் உயிரோடு இருப்பது மாதிரி மாஸ் என்டரி கொடுக்க வருகிறீர்களா என்று கேட்டிருக்கிறார் இயக்குனர். அதற்கு அப்பத்தா நான் வரவில்லை என்று சொல்லி மறுத்ததால் அவருடைய கேரக்டரை இறந்து போனது மாதிரி காட்டி குணசேகரன் அதற்கு காரணம் என்பதற்கு ஜீவானந்தம் ஆப்பு வைத்து விட்டார்.

அந்த வகையில் இதற்கான ஒவ்வொரு எவிடென்ஸும் ஐபிஎஸ் குற்றவை கையில் கிடைத்துவிட்டது. அதுமட்டுமல்லாமல் தர்ஷினியை கடத்துட்டு போய் சித்திரவதை செய்ததற்கு முக்கிய காரணம் குணசேகரன் என்பதும் தெரிந்து விட்டது. இதனைத் தொடர்ந்து ஜீவானந்தத்தின் மனைவி கயல்விழி இறப்பிற்கும் குணசேகரன் காரணம் என்பதால் எல்லா தவறுக்கும் சேர்த்து குற்றவை குணசேகனை அரெஸ்ட் பண்ணுவதற்கு வீட்டிற்கு வந்து விட்டார்.

ஆனால் அதற்கு சரியான புகார் கொடுத்தால் மட்டும்தான் ஆக்சன் எடுக்க முடியும் என்பதால் சக்தியை வைத்து குணசேகரனுக்கு எதிராக கம்பளைண்ட் கொடுக்க வைத்திருக்கிறார். சக்தியும் குணசேகரன் பண்ணிய அட்டூழியத்துக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்பதால் கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டார். இதனை தொடர்ந்து குணசேகரன் கையும் களவுமாக பிடித்து ஜெயிலில் போடுவதற்கு குற்றவை களமிறங்கி விட்டார்.

இந்த காரணங்களை சொல்லி குணசேகரனை குற்றவை அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போகிறார். ஆனால் இதையெல்லாம் பார்த்த விசாலாட்சி என் மகனை நானே போய் காப்பாற்றி வருகிறேன் என்று புலம்புகிறார். உடனே மல்லுவேட்டி மைனராக சுற்றி வந்த முரட்டு பீசு கதிர் மனதிலும் குற்ற உணர்ச்சி வர ஆரம்பித்து விட்டது.

அதாவது ஜீவானந்தத்தின் மனைவி கயல்விழி இறப்பிற்கு ஒருவிதத்தில் கதிரும் தான் காரணம். அதனால் அதற்கான தண்டனை அனுபவித்து ஆகவேண்டும் என்பதால் கதிர் நானே போலீஸ் ஸ்டேஷனில் போய் சரண்டர் ஆகிறேன் என்று முடிவு எடுத்திருக்கிறார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அனைவரும் அதிர்ச்சியாக நிலையில் நந்தினி கதிர் எடுத்த முடிவால் கண்ணீர் வடித்து என்ன சொல்வது என்று தெரியாமல் நிற்கிறார்.

ஆனால் எப்பொழுதுமே செய்த தவறுக்கு தண்டனை உண்டு என்பதற்கு ஏற்ப கதிர் கொஞ்ச நாளில் தண்டனை அனுபவித்து வீட்டிற்கு திரும்பி வருவார். அதற்குள் நந்தினி ஆசைப்பட்ட மாதிரி அவருடைய கனவை நிறைவேற்றி கணவருக்காக காத்துக் கொண்டிருப்பார். மேலும் இன்னும் ஒரு வாரத்தில் இந்த நாடகம் கிளைமாக்ஸ் நோக்கி பயணிப்பதால் ஒவ்வொரு காட்சிகளும் அவசர அவசரமாக முடிவுக்கு வந்து கொண்டே இருக்கிறது.

எதிர்நீச்சல் சீரியலில் சுவாரசியமான சம்பவங்கள்

Trending News