சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

எதிர்நீச்சலில் சில ஆர்டிஸ்ட்களை மாற்றிய ஜீவானந்தம்.. சக்தியை தூக்கிய டீம், நந்தினி உடன் வந்த மல்லுவேட்டி மைனர்

Ethirneechal: எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகம் டிசம்பர் 23ஆம் தேதி வரப்போகிறது. அதுவும் எதிர்நீச்சலுக்கு மிகவும் ராசியாக அமைந்த 9.30 மணிக்கு ஒளிபரப்பாக போகிறது என்பதால் அந்த நாளுக்காக ஒட்டுமொத்த மக்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்த மதுமிதாவிற்கு பதிலாக தொகுப்பாளனி பார்வதி நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.

இவர் ஏற்கனவே ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த புது புது அர்த்தங்கள் சீரியலில் தேவயானி மருமகளாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதன் பிறகு தற்போது சன் டிவி மூலம் இரண்டாவது சீரியலுக்கு அஸ்திவாரத்தை போட்டு விட்டார். அந்த வகையில் நந்தினி,ரேணுகா, ஞானம், கதிர், கதாபாத்திரத்தில் நடித்த அனைவருமே எதிர்நீச்சல் சூட்டிங் ஸ்பாட்டில் கதிரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.

ஆனால் அந்த புகைப்படத்தில் ஜனனி கதாபாத்திரத்தில் நடிக்க வந்த பார்வதிக்கு ஜோடியாக யார் என்கிற சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் சக்தி கதாபாத்திரத்துக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை கமிட் பண்ணி விடுவார்களோ என்ற பயமும் தற்போது மக்களிடத்தில் வர ஆரம்பித்து விட்டது. ஆனால் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்த மதுமிதாவிற்கு ஏற்ற ஜோடியாக சக்தியாக இருந்தார்.

ஒருவேளை இப்பொழுது கமிட் ஆகிய பார்வதிக்கு ஜோடியாக சக்தி செட் ஆகவில்லை என்பதால் எதிர்நீச்சல் டீம் அவரை தூக்கி விட்டது போல் தகவல் வெளிவந்திருக்கிறது. இதனை அடுத்து நந்தினி உடன் கதிர் பழைய மாதிரி மல்லுவேட்டி மைனர் உடன் கெத்தாக வந்து நிற்கிறார். ஆனால் தாரா கதாபாத்திரத்தில் நடித்த பாப்பாவிற்கு பதிலாக கொஞ்சம் வளர்ந்த ஒரு பெரிய பொண்ணு கமிட்டாகி இருக்கிறது.

இவர்களைத் தொடர்ந்து பட்டம்மாள், விசாலாட்சி, ஆதிரை போன்ற கேரக்டர்கள் அப்படியே வருகிறார்கள். ஆனால் இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் குணசேகரன் கதாபாத்திரத்திற்கு வேல ராமமூர்த்திக்கு பதிலாக 3 நடிகர்களிடம் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது. இதில் இளவரசு, பசுபதி மற்றும் பொன்வண்ணன் போன்றவர்கள் லிஸ்டில் இருக்கிறார்கள். அந்த வகையில் குணசேகரன் கதாபாத்திரத்தை மட்டும் சர்ப்ரைஸா எதிர்நீச்சல் டீம் கொண்டு வரப் போகிறார்கள்.

Trending News