எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றிய ஜீவானந்தம்.. மீண்டும் அடுப்பாங்கரையில் அடைக்க டபுள் பவர் வாங்கிய குணசேகரன்

எப்பொழுதும் குணசேகரன், வீட்டின் நடுவில் உள்ள மீனாட்சி அம்மனை கும்பிட்ட பிறகு தான் எந்த ஒரு காரியமாக இருந்தாலும் செய்வார். இப்பொழுது அந்த அம்மனை விட, வேறு ஒருவர் முன்பு புது சபதம் போட்டு சத்திய பிரமாணம் செய்துள்ளார்.

வீட்டை விட்டு தனியாக வாடகை வீட்டில் வசித்து வரும் மருமகள்கள் மீது பெரிய மைனர் குணசேகரன் தீரா கோபத்தில் இருக்கிறார். மீண்டும் அவர்களை அடக்கி ஆள்வதற்கு கங்கணம் கட்டி திரிகிறார். இதில் வேறு எரிகிற கொல்லியில் எண்ணெயை ஊற்றியது போல் மருமகள்களுக்கு புதிய ஒரு வீட்டை வாடகைக்கு கொடுக்கிறார் ஜீவானந்தம்.

ஜனனியின் நண்பர் மூலம் வீட்டின் சாவியை கொடுத்து அவர்களுக்கு வேண்டியவற்றை கொடுத்து உதவியுள்ளார் ஜீவானந்தம். முன்னதாக மாமியார் விசாலாட்சி அம்மையார், மருமகள்களை மீண்டும் வீட்டிற்கு கூப்பிட்டதற்கு நான்கு பேரும் மறுப்பு தெரிவித்து அவரை திருப்பி அனுப்பி விட்டனர்.

இதனால் கோபத்தின் உக்கிரத்திற்கு சென்ற குணசேகரன் புதிய சபதம் ஒன்றை எடுக்கிறார். அவரது தந்தை உபயோகித்த காவி ஆடைகளை பீரோவில் இருந்து கையில் எடுத்து பழிவாங்க சபதம் செய்கிறார். அவரது தந்தையை மனதில் நினைத்து தான் பழைய குணசேகரன் ஆக மாறுவதற்கு துணை நிற்கும்படி அருள் கேட்கிறார்.

மீண்டும் வீட்டை விட்டு சென்ற மருமகள்களை அழைத்து வந்து அடுப்பாங்கறையில் அடைத்து, அடுப்பு ஊத செய்து அவர்களை அங்கையே பசுப்பமாக்கி விடுகிறேன் என அந்த காவி வேஷ்டியை கையில் ஏந்திக்கொண்டு தன்னுடைய கோபத்தின் உச்சத்தை காட்டுகிறார் குணசேகரன்.