செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஜெமினி மறைத்த அந்த ரகசியம்.. திருமணத்திற்குப் பின் வெளிவந்த உண்மை

இப்போதெல்லாம் சினிமா பிரபலங்கள் எது செய்தாலும் அது உடனே பொதுமக்களுக்கு தெரிந்துவிடுகிறது. சமூக வலைத்தளங்கள் பெருகி விட்ட இந்த காலகட்டத்தில் அது ஒன்றும் பெரிய விஷயமல்ல. தற்போது கூட பாலா, தனுஷ் இவர்களின் விவாகரத்து செய்திதான் ஊடகங்களில் ரொம்ப பிஸியாக இருக்கிறது.

ஆனால் அந்தக் காலகட்ட சினிமாவில் இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் கிடையாது. சம்பவம் நடந்த பல மாதங்களுக்குப் பின்னர் தான் பொது மக்களுக்கு என்ன நடந்தது என்று தெரிய வரும். இது ஜெமினி கணேசனுக்கு ரொம்ப வசதியாக போய்விட்டது. ஏனென்றால் அந்தக் காலத்தில் அவர் செய்த அனைத்து காதல் லீலைகளும் வெளியில் தெரியவில்லையாம்.

அவருடைய ஒவ்வொரு காதலும் கல்யாணத்தில் முடிந்த பிறகுதான் வெளியில் அனைவருக்கும் தெரிந்ததாம். பல திருமணங்கள் செய்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த இவர் மனம் போல் மாங்கல்யம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது நடிகை சாவித்திரியை உருகி உருகி காதலித்தாராம்.

அதன் பிறகு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தியது பல காலம் வரை யாருக்கும் தெரியாமல் இருந்தது. முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே சாவித்ரி, புஷ்பவல்லி ஆகியோர்களுடன் ரகசிய திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.

அது இத்துடன் முடியவில்லை அவர் தன்னுடைய 72வது வயதில் ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து செய்திகள் வெளியாகி பெரிய சலசலப்பையும், கடும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத அவர் அந்தப் பெண்ணுடன் எட்டு வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தார்.

இப்படி கடைசிவரை காதல் மன்னனாக பெண்களுடன் ஜாலியாக வாழ்ந்து விட்டு தன்னுடைய 85 ஆவது வயதில் இவர் மரணமடைந்தார். மேலும் இவர் பகிரங்கமாக தான் ஒரு காதல் மன்னன் என்றும், என்னுடைய பலவீனம் பெண்கள்தான் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.

Trending News