வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

வழியே இல்ல சாமி ஹிட் வேண்டும்.. வேற மாதிரி யோசித்த ஜெயம் ரவிக்கு கிடைத்த பழைய டெக்னிக்

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக அறிமுகமாகி பின்னர் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக இருந்தவர் ஜெயம் ரவி. இவரின் நடிப்பில் வெளியான தனி ஒருவன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று அவருக்கு நல்ல புகழையும், பெயரையும் கொடுத்தது.

இந்தப் படத்திற்குப் பிறகு அவர் பல திரைப்படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் அனைத்தும் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. இதனால் அவர் எப்படியாவது வெற்றி படத்தைக் கொடுத்து தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று தன்னுடைய உடலை வருத்தி மிகவும் கஷ்டப்பட்டு நடித்து வருகிறார். ஆனால் பலன் ஒன்றும் பெரிதாக கிடைக்கவில்லை.

இதனால் அவர் என்ன செய்வது என்று தெரியாமல் தனக்குத் தெரிந்த தயாரிப்பாளர், இயக்குனர்கள் என்று எல்லோரிடமும் எனக்கு எப்படியாவது ஒரு நல்ல கதையை கொடுங்கள் என்று புலம்பித் தள்ளுகிறாராம். அவர் அறிமுகமான சமயத்தில்தான் நடிகர் தனுஷும் அறிமுகமாகி இருந்தார்.

ஆனால் அவர் தற்போது பாலிவுட் ,ஹாலிவுட் என்று எங்கோ சென்று விட்டார். ஆனால் ஜெயம் ரவி மட்டும் இன்னும் வளர்ந்து வரும் நடிகராகவே இருப்பது அவருக்கு பெரிய குறையாக தெரிகிறது. இதனால் அவர் தற்போது நடித்து வரும் அகிலன் திரைப்படத்தை தான் முழுவதுமாக நம்பி இருக்கிறாராம்.

இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கும் இந்த திரைப் படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து தன்யா ரவிச்சந்திரன், பிரியா பவானி சங்கர்  நடிக்கின்றனர். ஜெயம் ரவி இந்த இயக்குனருடன் ஏற்கனவே பூலோகம் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். அதன் பிறகு அவர்கள் இணையும் இரண்டாவது திரைப்படம் இது.

இந்தப் படம் இரண்டு காலகட்டங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறதாம். அதில் இரு வேடங்களில் நடிக்கும் ஜெயம் ரவிக்கு 80 காலகட்ட கேரக்டருக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். கருப்பன் திரைப்படத்திற்கு பிறகு அவர் இந்த படத்தில் நடிப்பதால் மிகவும் ஆர்வமாக நன்றாக நடித்து வருகிறாராம்.

ஏற்கனவே நடிப்பு என்றால் சும்மா பிச்சு உதறும் அவர் இந்த படத்தில் இன்னும் அற்புதமாக கலக்கி வருகிறாராம். அடுத்ததாக இன்றைய காலகட்ட கேரக்டருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். அவரும் நல்ல திறமையான நடிகை என்பதால் இந்தப் படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்று ஜெயம் ரவி எதிர்பார்க்கிறார்.

சமீபகாலமாக ஜெயம்ரவியின் படங்கள் தோல்வியில் முடிவதால் மக்கள் அனைவரும் அதை மறந்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும் இதனால் அவர் எப்படியாவது தன்னை நிரூபிக்க வேண்டும் என்று இந்த படத்தில் நம்பிக்கையோடு நடித்து வருகிறாராம். இந்த படமாவது அவருக்கு கை கொடுக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News