Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ரவி மோகனாக மாறியும் விடாது துரத்தும் சனி.. கராத்தே பாபுக்கு வந்த கலகம்

ரவி மோகனாக மாறியும் விடாது துரத்தும் சனி.. கராத்தே பாபுக்கு வந்த கலகம்

ரவி மோகன் இப்பொழுது தான் குடும்ப பிரச்சினைகளில் இருந்து மெல்ல மெல்ல வெளிவந்து கொண்டிருக்கிறார். மனைவியை விவாகரத்து செய்தவர் மாடல் அழகி கென்னிஷாவுடன் டேட்டிங் உறவில் இருக்கிறார். சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தில் வில்லனாக நடித்து வருகிறாராம். வருமானத்திற்கு […]

ரவி மோகன் இப்பொழுது தான் குடும்ப பிரச்சினைகளில் இருந்து மெல்ல மெல்ல வெளிவந்து கொண்டிருக்கிறார். மனைவியை விவாகரத்து செய்தவர் மாடல் அழகி கென்னிஷாவுடன் டேட்டிங் உறவில் இருக்கிறார். சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தில் வில்லனாக நடித்து வருகிறாராம்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருக்கும் சினிமாக்காரர்களை அமலாக்கத்துறை கண்காணித்து வருகிறது. அதன் காரணமாக டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் பாஸ்கரனை ED வலையத்திற்குள் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனால் அவர்கள் தயாரிக்கும் படங்கள் அப்படியே நின்று போய் உள்ளது. இட்லி கடை, பராசக்தி போன்ற படங்களை அந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் பராசக்தி படம் மட்டும் ஸ்ரீலங்காவில் நடைபெற்ற சூட்டிங் நிதி பற்றாக்குறையால் பாதியில் நிற்கிறது. இட்லி கடை படத்தை தனுஷ் தன்னுடைய பணத்தை போட்டு எடுத்து வருகிறார்.

ஆகாஷ் பாஸ்கரனை போல் இந்த விசாரணை வட்டத்துக்குள் இருப்பவர் ரத்தீஷ் மற்றும் ஜுஜூ விக்ரம் என்ற தொழிலதிபர்கள். இப்பொழுது ரவி மோகன் நடிப்பில் ரிலீசுக்கு காத்திருக்கும் படம் கராத்தே பாபு. இந்த படமும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறது. இதற்கு பைனான்ஸ் செய்திருப்பவர் ரத்தீஷ்.

கராத்தே பாபு படத்தை ஜெயம் ரவி பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறார். இதுவரை அவர் நடிக்காத அரசியல் சம்பந்தப்பட்ட வித்தியாசமான கதை அம்சம் கொண்டது இந்த படம். இப்பொழுது இந்த படத்தை தயாரிக்கும் நிறுவனத்திற்கும், அமலாக்க துறையால் தேடப்பட்டு வரும் பிசினஸ் மேன் ரத்தீஷ் பைனான்ஸ் செய்து உதவியுள்ளார். அதனால் இந்த படத்திற்கும் ஆபத்து வந்துள்ளது.

T

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.